வாழ்நாள் கல்வி

இயக்குநர்களின், கடமைகளும் பொறுப்புகளும்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


இயக்குநர்களின் கடமைகளும் பொறுப்புகளுக்கான முன்னுரை

உற்பத்தியாளர் கம்பெனி என்பது ஒரு இரயில் மாதிரி.  அந்த இரயிலில் பயணம் செய்பவர்கள் பங்குதாரர்கள்.  பங்குதாரர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது இரயில் பெட்டி.  இரயில் பெட்டி மாதிரி பங்குதாரர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது கம்பெனியின் இயக்குநர்கள்.  அந்த இயக்குநர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவல்களை காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் கனடா திறந்தவெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து வாய்ஸ்மெயில்களாக தொகுத்து வழங்குகிறோம்.இயக்குநர் தேர்வு

கம்பெனியின் உறுப்பினர்களால் கம்பெனியின் அதிகாரபூர்வ பொதுக்குழு கூட்டத்தில் இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிகாலம் ஐந்து ஆண்டுகள். இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தேவையான சான்றிதழ்களான PAN Card, DIN நம்பர், டிஜிட்டல் கையெழுத்து ஆகியவைகள் வேண்டும்.இயக்குநர்கள் கூட்டம்

கம்பெனி சட்டவிதி 581 ஏ(1) ன்படி ஒவ்வொரு வருடமும் நான்கு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கூட்டத் தகவல்கள் ஏழு நாட்களுக்கு முன்னர் இயக்;குநர்களுக்கு தபாலில் அனுப்பபட வேண்டும். இயக்குநர்கள் கூட்டத்திற்கு 1/3 இயக்குநர்கள் அல்லது மூன்று உறுப்பனர்கள் கலந்து கொள்ள வேண்டும். இயக்குநர்கள் வரமுடியாவிட்டால், அதற்கான காரணத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். இயக்குநர் குழு கூட்டம் சட்டவிதி 581ஏ (3)ன் படி குறுகிய கால அறிவிப்பில் நடத்தலாம்.  ஆனால் அந்த காரணத்தை எழுத்து வடிவில் இயக்குநர்கள் குழு பதிவு செய்து வைக்க வேண்டும். இயக்குநர்களின் எண்ணிக்கை 15-க்கு மேல் இருக்க கூடாது. இதில் பத்து இயக்குநர்கள் அடிப்படை உறுப்பினர்களாகவும் மீதி ஐந்து பேர் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் வகையில் பிற துறைகளை சார்ந்த தொழில் நுட்ப நிர்வாகிகள் மற்றும் வங்கி அதிகாரிகளாகவும் இருக்கலாம். அந்த ஐந்து பேருக்கும் ஓட்டுரிமை கிடையாது. இயக்குநரின் பொறுப்புகள்

கம்பெனியின் நிர்வாகம் வடிவமைப்பு தீர்மானித்தல் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை தவறாமல் நடத்துதல். பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றுதல் வேண்டும்.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய இயக்குநர்களை நியமனம் செய்ய வேண்டும். தனது பணிகளை சரிவர செய்யாத CEO, பணியாளர் இயக்குநர்களை அவையின் ஒப்புதலோடு நீக்குதல்.  கம்பெனியின் ஆண்டு கணக்கை தணிக்கை செய்து தணிக்கை மற்றும் ஆண்டு அறிக்கையை கம்பெனியின் தொழில் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.  கம்பெனியின் தணிக்கை அறிக்கையின்படி இலாப பங்கு மற்றும் போனஸ் அறிவித்தல் வேண்டும். இயக்குநர் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை திறம்பட செயல்படுத்த தங்களது பயனுள்ள கருத்துகளை தெரிவித்தல் வேண்டும். கம்பெனி சட்ட ஆவணங்கள் மற்றும் கணக்குகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பதை நிறை வேற்றுதல் வேண்டும்.  தொழில் யுக்திகளை பரிமாறிக் கொள்ளுதல் வேண்டும். கம்பெனியின் தகவல்களை மொபைல் போனில் வாய்ஸ் மெயிலாக கொடுத்து உதவ வேண்டும்.இயக்குநர்களின் முக்கியத்துவம்

இயக்குநர்கள் கம்பெனியின் விதிமுறைகள் மற்றும் செயல்முறை விதிகளுக்குட்பட்டு எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றலாம். இயக்குநர்கள் அவை கம்பெனி முழுவதற்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் அவர்கள் கம்பெனியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதிலளித்து தனது செயல்பாடுகள் பற்றி கம்பெனியின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் எடுத்துரைக்க வேண்டும். கம்பெனி இலாபகரமாக செயல்பட உறுதுணையாக இருக்கவேண்டும்.இயக்குநர்களின் கடமைகளும் பொறுப்புகளுக்கான முடிவுரை

இயக்குநர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்னும் தலைப்பில் இயக்குநர் என்பவர் யார், யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், இயக்குநர்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், இயக்குநர்கள் கூட்டம், கடமைகளும், பொறுப்புகள் முக்கியத்துவம் ஆகிய தகவல்களை வாய்ஸ்மெயில்களாக கொடுத்தது பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறோம்.