வாழ்நாள் கல்வி

பசுந்தீவனங்களின் வகைகள்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


பசுந்தீவன வகைகளுக்கான முன்னுரை

கால்நடை வளர்ப்பு இந்தியாவில் வேளாண்மையின் ஒரு முக்கிய தொழிலாகவே செய்யப்படுகிறது. இதில் கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் விவசாயக் கழிவுகளில் சத்துக்கள் குறைந்து காணப்படுகிறது.  இதனால் பால் உற்பத்தியில் முழு  திறனை அடைய முடியவில்லை. நம் நாட்டின் நிலப் பற்றாக்குறை காரணமாக கால் நடைகளுக்கு பசுந்தீவனம் தனியாக உற்பத்தி செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.  இதனால் இருக்கும் குறைவான நிலத்தில் பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து கொடுத்து ஆரோக்கியமான கால்நடைகளை வளர்க்கலாம்.தானியவகை தீவனப் பயிர்கள்

மறுதாம்பு சோளம் கோ.எப்.எஸ் 29 இந்த ரகம் மென்மையான தண்டுகள் கொண்டது. கால்நடைகள் உண்பதற்கு சுவையானது. அதிக இலைத்தண்டு விகிதாச்சாரத்தைக் கொண்டது.  ஏக்கருக்கு 75.5 டன்கள் வருடத்திற்கு மகசூல் தரக்கூடியது. வருடத்திற்கு ஆறு முதல் ஏழு அறுவடை வரை செய்யலாம்.புல் வகைகள்

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் ஒரு பல்லாண்டு தீவனப்பயிர்.  கோ-3 ரகத்தை விட சுவையானது. தண்டு மற்றும் இலைகள் மிருதுவானவை.  பசுந்தீவன மகசூல் ஏக்கருக்கு 160 முதல் 170 டன்கள் வரை கிடைக்கும்.  ஏக்கருக்கு 15 லட்சம் வரை தண்டு கரணைகள் உற்பத்தி செய்யலாம்.  கினியாபுல் (ஜி.ஜி)3, இது நிழலை தாங்கி வளரக்கூடியது. தென்னந் தோப்புகளில் ஊடுபயிராக பயிரிட ஏற்றது. மென்மையான தண்டுகளை உடையது. பசுந்தீவன மகசூல் ஏக்கருக்கு 150 டன்கள் கிடைக்கும்.   ஏக்கருக்கு பத்தாயிரம் வரை வேர் கரணைகள் கிடைக்கும்.கொலுக்கட்டைப்புல் கோ-1

இதை பல்லாண்டு பயிராக பயிரிடலாம் மானாவாரி மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. வருடத்திற்கு ஏக்கருக்கு 20 டன்கள் வரை பசுந்தீவன மகசூல் தரக்கூடியது.பயறு வகை தீவனங்கள்

கோ-2 இப்புதிய இரகம் 2013 ஆண்டு வெளியிடப் பட்டது. இது கோ-1 காட்டிலும் சிரிய பண்புகளைக் கொண்டதாக உள்ளது. அதிக தண்டுகள்(15-20) மிருதுவான மற்றும் கரும்பச்சை இலைகள் கொண்டது. பசுந்தீவன மகசூல் 70 டன்கள் (வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு) வரை கிடைக்கும் இது அடர்த்தியான மற்றும் கொத்து கொத்தாக பூக்கும் திறன் கொண்டது.  கூடுதல் விதை உற்பத்திக்கும் வழி வகுக்கும்.பயறு வகை தீவனங்களின் வேலி மசால், தட்டைபயிறு சிறப்புகள்

வேலிமசால்:

ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது அதிக மகசூலும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையும் கொண்டது. வருடத்திற்கு ஏக்கருக்கு 40 டன்கள் மகசூல் கிடைக்கும். 100 கிலோ விதை மகசூலும் தரக்கூடியது.

தட்டைபயிறு:

கோ.எப்.சி-8 60 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஏக்கருக்கு பசுந்தீவன மகசூல்; 15 டன்களும். 625 கிலோ விதை மகசூலும் தரக்கூடியது.  உவர் நிலத்தில் குதிரைமசால் மற்றும் வேலிமசால், களர் உவர் நிலத்தில் வேலிமசால், தரிசு நிலத்தில் முயல்மசால் மற்றும் சவுண்டல்  போன்ற பயிர்களை தேர்வு செய்து வளர்ப்பதின் மூலம் தீவன உற்பத்தியை பெருக்கலாம். மேலும் விதை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக இலாபம் பெறலாம்.பசுந்தீவன வகைகளுக்கான கால்நடைகளுக்கு தேவையான சமச்சீர் தீவனங்கள்

தீவனத்தை உற்பத்தி செய்ய தானியவகை தீவன பயிர்களான மக்காசோளம் மற்றும் சோள பயிருடன் பயிறு வகை தீவன பயிர்களான தட்டைபயிரை 1:1 என்ற விகிதாச்சாரத்தில் பயிர் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கினியாபுல் மற்றும் கொழுக்கட்டைபுல் இவற்றில் ஏதேனும் ஒரு புல்லுடன் பயிறுவகை தீவனபயிர்களை (வேலிமசால்) அல்லது முயல்மசால் 3:1 என்ற விகித்தில் பயிர்செய்து பால் உற்பத்தியை பெருக்கலாம்.பசுந்தீவன வகைகளுக்கான முடிவுரை

பசுந்தீவனங்களின் வகைகள் என்னும் பாடத்திட்டத்தில் தானிய வகை தீவனப் பயிர்கள், புல் வகை தீவனப் பயிர்கள், கம்பு நேப்பியர், கொலுக்கட்டைப் புல் மற்றும் பயிர் வகை தீவன பயிரில் குதிரை மசால் மற்றும் வேலி மசால், தட்டைப் பயிர் போன்ற பயறு வகைகள் போன்ற தீவனங்களை உற்பத்தி செய்யும் முறைகளை தொகுத்து வழங்கியது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.