வாழ்நாள் கல்வி

நிலக்கடலை உற்பத்தி

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


நிலக்கடலை உற்பத்திக்கான முன்னுரை

மனிதர்களுக்குத் தேவையான புரதச் சத்து, பால், முட்டை, இறைச்சி, பயறு வகைகளின் மூலம் கிடைக்கிறது.  அதுமட்டுமில்லாமல் நிலக்கடலையின் மூலமாகவும், புரதம், தரமான எண்ணெய், நிலக்கடலை கொண்டு மிட்டாய்கள் தயாரிக்கப்படுகிறது.  அது போக நிலக்கடலை செடிகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுது.  இப்படிப்பட்ட நிலக்கடலை உற்பத்தி பற்றிய தகவல்களை காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல் நிறுவனத்தின் மூலம் வாய்ஸ் மெயில்களாக உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.நிலக்கடலையின் முக்கியத்துவம்

இந்தியா எண்ணெய் வித்துப் பயிர்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நம் நாட்டில் உணவு தானியப்பயிர்களின் மொத்தப் பரப்பளவில் 14 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்யப்படுகின்றது. இதில் 40 சதவீதம் நிலகடலை பயிர் செய்யப்படுகின்றது. கடலை எண்ணெய் உணவு தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தை வகுக்கின்றது. மேலும் கடலைப் பிண்ணாக்கு மண் வளத்தைக் காக்கவும், கால்நடைகளின் உணவாகவும் பயன்படுகின்றது.நிலம் தேர்வு மற்றும் நிலம் தயாரிப்பு

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணல் சார்ந்த நிலமாக இருத்தல் நன்று.  தேர்ந்தெடுத்த நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழுதபின் ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் நன்கு மக்கிய தொழு உரத்தை இட வேண்டும். அடியுரமாக ஒரு ஏக்கருக்கு யூரியா 35, சூப்பர் பாஸ்பேட் 25, பொட்டாஷ; 38 கிலோ உரங்களை இட வேண்டும்.பாத்தி அமைத்தல் மற்றும் விதைதேர்வு

நீரின் அளவை பொறுத்து ஆறு அடி அல்லது 8 அடி நீளம் 4 அடி அகலம் பாத்திகள் அமைக்க வேண்டும்.

டிஎம்வி-7, கோ-2, கோ-3, வி.ஆர்.ஐ-3, ஆழியார்-2 மற்றும் விஆர்ஐ- 5 ஆகிய இரகங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.விதைநேர்த்தி செய்யும் முறைகள்

நிலக்கடலையில் நல்ல மகசூல் பெற ஒரு சதுர மீட்டருக்கு 35 செடிகள் இருக்க வேண்டும்.  விதைப்பதற்கு ஒரு நாள் முன்னர் ஒரு ஏக்கருக்கு 30-35 கிலோ தேவையான விதைகளுடன் டிரைக்கோடெர்மா விரிடி நான்கு கிலோ அல்லது சூடோமோனாஸ் ஃபுளுரோசென்ஸ் 10 கிலோ என்ற அளவில் கலந்து வைக்க வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் பூசணக்கொல்லி மருந்து கலந்து விதை நேர்த்தி செய்து 24 மணிநேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதனால் விதை சேமிப்பின்போது ஏற்படும் பூஞ்சாண நோயிலிருந்து விதைகளைப் பாதுகாக்கலாம்.

ஒரு ஏக்கருக்குத் தேவையான பருப்பை விதை நேர்த்தி செய்ய ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம், நன்கு ஆறிய கஞ்சி ஒரு லிட்டர் முதலில் கஞ்சியுடன் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவை நன்கு கலந்து கொள்ளவும். வுpதைகளை சாக்குப் பையின்மேல் பரப்பி இக்கலவையை விதைகளின் மேல் படும்படி தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்தவுடன், விதைகளை மேலும், கீழும் புரட்டி (கைகளினால் புரட்டினால் தோல் உரிந்து விடும் என்பதால் சாக்குப்பையின் முனைகளைப் பிடித்துக் கொண்டு ஆட்ட வேண்டும்.) நுண்ணுயிர்க் கலவை பருப்பின் மீது நன்கு ஒட்டியவுடன் முப்பது நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்.விதை நேர்த்தியின் பயன்கள்

மண்ணில் உள்ள பயிர்களால் கிரகிக்க முடியாத மணிச்சத்தை பாஸ்போ பாக்டீரியா பயிர் கிரகிக்கும் நிலைக்கு மற்றித் தருகிறது. ரைசோபியம் தழைச்சத்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொடுக்கின்றது. பயிர் வேர்களில் அதிக அளவு வேர்முடிச்சுகளைத் தோற்றவித்து காற்றில் உள்ள தழைச்சத்தை பயிர்களுக்கு கிடைக்கச் செய்கின்றது.   அதிக அளவு தழைச்சத்து இருந்தால் வேர் முடிச்சுக்களில் சேமிக்கப்படுகிறது.நடவு முறை

செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியும், வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும் விட்டு பருப்புக்களை நடவேண்டும்.பயிர் மேலாண்மை களை நிர்வாகம் மற்றும் நீர் நிர்வாகம்

ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை 15 கிலோ மணலுடன் கலந்து(மொத்தம் 20 கிலோ) நடவு நட்டபின் பாத்திகளில் சீராகத் தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்:

விதைப்பதற்கு முன் ஃபுளுகுளோரிலின் என்ற களைக் கொல்லியை ஒரு ஹெக்டருக்கு 2.0 லிட்டர் என்ற அளவில் மண்ணில் கலந்து அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

மணல் சார்ந்த நிலமானால் ஒரே தண்ணீரில் நன்கு முளைத்து விடும்.

இரண்டாவது தண்ணீரில் களை எடுக்க வேண்டும்.ஜிப்சம் இடுதல்

மூன்றாம் தண்ணீரில் இரண்டாம் களை எடுத்து ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். (நட்ட 45-வது நாள்)

அதிக அளவில் நீர் கட்டினால் செடி வளர்ந்து, விழுதுகள் மண்ணைத் தொடாது.

நன்கு விழுது இறங்கியவுடன் பத்து நாளுக்கு ஒரு தண்ணீர் விடவேண்டும்.

அறுவடைக்கு இரண்டு நாள் முன் கடைசியாக தண்ணீர் கட்டி கடலை எடுக்க வேண்டும்.மண் அணைத்தல்

பூ பிடித்து விழுதுகள் இறங்கும் சமயம் (40-45 நாளில்) மண்ணை நன்கு கொத்திவிட்டு செடியைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.

மண்ணை அணைத்தபின் மண்ணை கிளறக்கூடாது.

விழுதுகள் மண்ணில் இறங்குவதற்கு ஏதுவாகிறது.

மண்ணை அணைப்பதனால் காய் பிடிப்பது அதிகரிக்கும்.அறுவடை

கடலை நடவு செய்த 115-120  நாட்களில் அறுவடை செய்யலாம்.  அடி இலைகள் காய்ந்து உதிர ஆரம்பிக்கும்.  நுனி இலைகள் மஞ்சள் நிறமாகவும், காய் ஓடுகளின் உட்பக்கம் கருப்பு நிறமாகவும்.  இந்த மாதிரியான அறிகுறிகள் தான் கடலை முதிர்ச்சி அடைந்ததின் அடையாளம். நிலக்கடலை உற்பத்திக்கான முடிவுரை

நிலக்கடலை உற்பத்தியில் நிலக்கடலையின் முக்கியத்துவம், நிலம் தேர்வு மற்றும் தயாரிப்பு, விதைத் தேர்வு, பூஞ்சாணக் கொல்லி மூலம் விதை நேர்த்தி முறை அதன் பயன்கள், பயிர் கிரகிக்கும்; முறைக்கு மாற்றித் தருதல், நடவு இடைவெளி, பயிர் மேலாண்மை, நீர் நிர்வாகம், மண் அணைத்தல், அறுவடை ஆகிய தலைப்புகளில் செய்திகளை வாய்ஸ்மெயில்களாக கேட்டீர்கள்.  இதைக் கேட்டு, பின்பற்றி பயன்பெறுவீர்கள் என நம்புகிறோம்.

'அதிக எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்வோம்

அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவோம்'.