வாழ்நாள் கல்வி

கோ.எப்.எஸ் -29 தீவன சோள உற்பத்தி முறைகள்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


கோ.எப்.எஸ் தீவன சோள உற்பத்தி முறைகளுக்கான முன்னுரை

இன்றைய சூழ்நிலையில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகளின் வாழ்வாதாரம் கால்நடைகளை நம்பியே உள்ளது.  பசுந்தீவனங்கள் இல்லாமல் கால்நடைகளை வளர்ப்பது கடினம்.  ஆதற்கு குறைந்த நீரை பயன்படுத்தி விளைவிக்கக்கூடிய பசுந்தீவனமான கோ.எப்.எஸ்.-29 தீவன மக்காச்சோளம் உற்பத்தி முறைகளை பற்றிய தகவல்களை காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல்; நிறுவனத்தின் மூலம் வாய்ஸ் மெயில்களாக உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.நிலம் தயார்செய்தல்

தீவன சோளம் கோ.எப்.எஸ் பயிரிடப்போகும் நிலத்திற்கு ஏக்கருக்கு பத்து டன் முதல் 15 டன்  தொழு உரம் போட வேண்டும். அத்துடன் அடிஉரமாக 10 பாக்கெட் அசோஸ் பைரில்லம்(2கிலோ)  10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா(2 கிலோ) அல்லது 20 பாக்கெட் அசோபாஸ்(4 கிலோ) கலந்து போட வேண்டும். நிலத்தை இரும்பு கலப்பைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று தடவை நன்றாக உழுக வேண்டும். நன்கு சமபடுத்தி பாத்திகள் போடவேண்டும்.விதை அளவு மற்றும் உர மேலாண்மை

கோ.எப்.எஸ் 29 இரக சோள விதை ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ வேண்டும். வரப்பு பாத்தி கட்டி வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும் விதைக்கு விதை 10 முதல் 15 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும் அடி உரம் தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 20 கிலோ சாம்பல் சத்து 40 கிலோ போட வேண்டும் மேல்லுரமாக விதைத்த 30 நாட்கள் கழித்து ஒரு ஹெக்டருக்கு தழைச்சத்து 25 கிலோ போட வேண்டும். ஒவ்வொரு தடவையும் அறுவடை செய்து விட்டு 25 கிலோ தழைச்சத்து போடவேண்டும். நான்காவது தடைவ அறுவடை செய்த பின் தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து 20 கிலோ போட வேண்டும்.நீர் மேலாண்மை மற்றும் களை நிர்வாகம்

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்தது 3-வது நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் அதன் பிறகு 10நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 20 நாட்கள் கழித்து ஒரு களை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அடுத்து 30-40  நாட்களில் அடுத்த களை எடுக்க வேண்டும்.பயிர் பாதுகாப்பு மேலாண்மை

பொதுவாகவே கோ.எப்.எஸ் ரகம் பயிர் செய்தால் பயிர் பாதுகாப்பு தேவைபடாது. விதைத்த 10-வது நாளில் குருத்து ஈ தென்பட்டால் டைமிதோயட் 30 ஈசி என்னும் மருந்தை ½ லிட்டர் எடுத்துக்கொண்டு அதை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம். தீவன அறுவடை செய்வதற்கு 30 நாட்களுக்கு முன் மருந்து தெளிக்கக்கூடாது.அறுவடை

கோ.எப்.எஸ் சோளம் விதைத்த 65-70 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம் மறுபடியும் தழையும்.  அதை 50 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.  இது போல வருடத்திற்கு ஆறு அல்லது ஏழு முறை அறுவடை செய்யலாம் இதன் மகசூல் ஒரு ஏக்கருக்கு வருடத்தில் 70 டன் வரைக்கும் கிடைக்கும். இந்த தீவனங்களில் இளம் பருவத்தில் நைட்ரஜன் சைனைடு என்னும் நச்சு பொருள் அதிகமாக இருக்கும். எனவே இந்த தீவனத்தை நன்றாக பூ பூத்த பிறகு அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்க. வேண்டும்.கோ.எப்.எஸ் தீவன சோள உற்பத்தி முறைகளுக்கான முடிவுரை

கோ.எஃப்.எஸ் தீவனம் சோள உற்பத்தியில் நிலம் தயார் செய்தல், விதை அளவு, உர மேலாண்மை, நீர் மேலாண்மை, களை நிர்வாகம், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை என்னும் தலைப்புகளில் செய்திகளை வாய்ஸ் மெயிலாகக் கொடுத்ததைக் கேட்டீர்கள்.  இந்த முறைகளில் பசுந்தீவன உற்பத்தி செய்து பால்மாடுகளுக்குக் கொடுத்து, நல்ல வருமானம் பெறுவோம்.