வாழ்நாள் கல்வி

வங்கிக் கடனுக்கு திட்ட அறிக்கை தயாரித்தல்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


வங்கிக் கடனுக்கு திட்ட அறிக்கை தயாரித்தலுக்கான முன்னுரை

ஒரு தொழில் செய்ய அந்தத் தொழிலைப் பற்றிய அனுபவ அறிவும், முதலீடும் வேண்டும்.  தொழில் அனுபவம் நம்மிடம் இருக்கும்.  ஆனால் பணம் இல்லை.  அதற்கு நாம் வங்கியில் கடன் வாங்கலாம்.  நேரடியாக வங்கிக்கு சென்று கடன் கேட்கலாம். அதற்கு முன்னர் நாம் கேட்கும் கடனுக்கான திட்ட அறிக்கையை தயார் செய்து, அந்;தத் திட்ட அறிக்கையோடு வங்கிக்கு போனால் நன்றாக இருக்கும்.  இந்தத் திட்ட அறிக்கை தயார் செய்யும் முறைகளை பற்றிய தகவல்களை காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல் நிறுவனத்தின் மூலம் வாய்ஸ் மெயில்களாக உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.வங்கிக் கடனுக்கு திட்ட அறிக்கை தயாரித்தலுக்கான தொழில் கடன் பெற வங்கியை அணுகும் முறை

ஒருவர் தொழில் செய்யப்போகிறேன் கடன் கொடுங்கள் என்று கேட்பதை விட, அவர் செய்யப்போகும் தொழிலுக்கு எவ்வளவு பணம் வேண்டும், அதன் மூலம் மாதத்திற்கு கிடைக்கும் வருமானம், தொழிலுக்கான செலவு ஆகியவைகளை கணக்கிட்டு, அது போக மீதமிருக்கும் தொகையில் அசலும் வட்டியும் கட்டுவதற்கான திட்ட அறிக்கையோடு வங்கி மேலாளரை அணுகினால், அவர் தொழில் கடனுக்கு கண்டிப்பாக உதவுவார்.கறவை மாடு கடனுக்கான மாதிரி திட்ட அறிக்கை

வ.எண்.

விபரம்

தொகை

 

1

 

இரண்டு கலப்பின பசுமாடு 40000 X 2

80000

 

2

கொட்டகை 

5000

 

3

உபகரணங்கள்     

3000

 

4

தீவனச் செலவு இரண்டு மாதத்திற்கு

5000

 

5

காப்பீடு 5%

4000

 

6

பயணச் செலவு

2000

 

7

இதர மற்றும் மருத்துவ செலவு

4000

 

 

மொத்தம்

103000

 

 

பங்களிப்பு 15%

15300

 

 

வங்கிக் கடன்

86700

 வங்கிக் கடன் பெறுவதற்கான முக்கிய நிபந்தனை

கறவை மாடு கடன் கேட்பவர்கள், மாடு வளர்ப்பில் அனுபவம் இருக்கவேண்டும்.  மாடு வாங்கும்போது ஜெர்சி, பிரிசியன் கலப்பின மாடுகளை முதல் ஈத்து, இரண்டாது ஈத்தோட மாடு வாங்கவேண்டும்.  முதல் கடன் தவணையில் ஒரு மாடும் ஆறு மாதத்திற்கு பிறகு இரண்டாவது கடன் தவணையில் இரண்டாவது மாடும் பிடிக்கவேண்டும்.  நிலமிருந்தால் நல்லது.  முhட்டிற்கு தேவையான தீவனங்களை வளர்க்கலாம். மாடுகளை வாங்கியவுடன் காப்பீடு செய்யவேண்டும்.  தவணைக்காலம் ஐந்து வருடம்.  இதில் மூன்று மாதம் விடுமுறை காலம்.  இதுதான் வங்கிக் கடனுக்கான நிபந்தனை.வங்கிக் கடனுக்கு திட்ட அறிக்கை தயாரித்தலுக்கான முடிவுரை

விவசாய உப தொழிலான கால்நடை வளர்ப்பு கடன்களுக்கு, வங்கி ஒரு அச்சாணியாக நிற்கிறது.  பால்மாடு வளர்ப்புத் திட்ட அறிக்கை சம்பந்தமான பாடப்பிரிவில் உங்களுக்கு வங்கியை அணுகுதல், பால்மாடு வளர்ப்புக்கான மாதிரித் திட்ட அறிக்கை வங்கியின் முக்கிய நிபந்தனைகள் போன்ற சிறிய தலைப்புகளில் காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் விடியல் நிறுவனம் மூலம் தொகுத்துக் கொடுத்த வாய்ஸ்மெயில்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.