வாழ்நாள் கல்வி

பசு கன்று பராமரிப்பு

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


பசு கன்று பராமரிப்பிற்கான முன்னுரை

சிசுவை காப்பாற்றினால் ஒரு நல்ல குடிமகனை உருவாக்கலாம்.  இன்றைய கன்று நாளை பசு என்பது போல கன்றுகளை சீராக பராமரிப்பது மாடு வளர்ப்பில் முக்கிய இடம் பெறுகிறது. நாம் இப்பொழுது இளம் பசுக்கன்றுகளின் பராமரிப்பு பற்றிய தகவல்களை தகவலை  காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல்; நிறுவனம் மூலம் வாய்ஸ் மெயில்களாக உங்களுக்கு தொகுத்து வழங்குகிறது.கன்று பிறந்தவுடன் பராமரிப்பு

ஈன்றவுடன் தாய் பசுவை கொண்டு கன்றுக் குட்டியை நக்க விட வேண்டும். கன்று பிறந்தவுடன் அதன் மேலே ஒட்டி இருக்கின்ற பிசுப்பிசுப்பான திரவத்தையும் குறிப்பாக மூக்கில் அடைத்து இருக்கின்ற கோழைகளையும் எடுத்து விட்டு. துணி அல்லது காய்ந்த வைக்கோல் கொண்டு துடைத்து எடுக்கவேண்டும். தொப்புள் கொடியை 3.5 செமீ விட்டு சுத்தமான கத்திரிகோலால் வெட்டி டிஞ்சர் அயோடின் போட வேண்டும். தொப்புள் கொடி தரையில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கன்று பிறந்த அரைமணி நேரத்தில் எழுந்து நிற்கவில்லை என்றால் கால் குளம்புகளில் உள்ள ஜவ்வுப் பகுதியை எடுத்து விடவேண்டும்.  ஜவ்வுப் பகுதியை எடுத்து விட்டால் தானாக எழுந்து நிற்கும்.கன்றுகளுக்கு கொடுக்க வேண்டிய சீம்பாலின் முக்கியத்துவம்

கன்று பிறந்த ஒரு மணி நேரம் கழித்து சீம்பால் அவசியம் கொடுக்க வேண்டும். இந்த பாலில் புரதசத்து, ஊட்டசத்து, தாதுசத்து, உயிர்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முதல் அனைத்தும் இருப்பதால், சீம்பால் தருவது மிக மிக அவசியம். சீம்பால் கன்றுகளின் ஜீரண சக்தியை தூண்டி விட்டு உணவு பாதையில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றும்கன்றுகளுக்கு கொடுக்க வேண்டிய பாலின் அளவு

கன்றுகளுக்கு வயிற்றில் ஜீரணிக்கின்ற பகுதி முழு வளர்ச்சி அடையாமல் இருக்கும். இந்த சமயத்தில் கன்று அதிகமான பாலைக் குடித்தால் ஜீரணமாகாமல் அங்கங்கே தங்கி, புளித்து பலவிதமான ஜீரணகோளாறுகள் ஏற்படும். இதனால் கன்றுகளுக்கு குறைந்த அளவு பாலை குறிப்பிட்ட நேரங்களில் கொடுப்பது நல்லது. துள்ளித்திரியும் கன்றுகளுக்கு இந்த தொல்லை இல்லை.  கன்றுகள் ஒன்றோடு ஒன்று நக்குகின்ற பழக்கத்தை குறைக்க பால் குடித்தவுடன் நாக்கில் கொஞ்சம் உப்பை தடவி விடவேண்டும். கன்றுகள் ஒன்றை ஒன்று நக்கும் போது உரோமம் வாய் வழியே போய் திரண்டு உணவு பாதையை அடைத்துகொள்ளும். இதனால் கன்றுகளுக்கு மரணம் ஏற்படும்.கன்றுகளின் ஆரம்பகாலகட்ட பராமரிப்பு

கன்றுகளுக்கு  ஒன்று முதல் ஐந்து வாரங்களுக்கு பால் கொடுப்பது முக்கியம். பிறந்த மூன்றாவது வாரத்துக்கு பிறகு புற்களை தின்பதற்கு பழக்கவேண்டும். இதுபோன்ற காலங்களில் இளம் பசும்புற்களைக் கொடுக்கலாம்.  அதோடு உலர் தீவனங்களை கொஞ்சம் சேர்த்து கொடுத்தால் கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.குடற்புழு நீக்கம் செய்தல்

குட்டிகளை தினமும் குளிப்பாட்ட வேண்டும்.  இதன் மூலம் கன்றுகளின் தோலின் மேல் உள்ள அழுக்கு மற்றும் முதிர்ந்த ரோமங்களை அகற்றி விடலாம். கன்றுகளுக்கு வளர்ச்சியை பாதிக்கும்.  குடல் புழுக்களை நீக்க மருந்துகளை பிறந்த ஒரு மாதத்திலும் பின் மூன்று மாத இடைவெளியிலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். அப்போது தான் கன்றுகள் நல்ல ஆரோக்கியமாக வளரும்.கன்றுகளுக்கு நோய் தடுப்பு மேலாண்மை

குட்டிகளுக்கு பொதுவாக கழிச்சல், படை, சொறி ஆகியவை குடற்புழுக்கள், பேன் மற்றும் உண்ணிகளால் ஏற்படும்.  இந்த நோய்கள் மூலம் கன்றுகளின் இறப்பு விகிதம் அதிகம் ஏற்படும். இதை தடுக்க கால்நடை மருத்துவரை ஆலோசித்து ஆறு மாத வயது முதல், அடைப்பான், தொண்டை அடைப்பான், சப்பை நோய், காணை நோய் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடவேண்டும். கன்றுகள் ஆரோக்கியமாய் வாழ மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மசாலா உருண்டை போன்றவற்றை கொடுக்கலாம்.கன்றுகளுக்கு தீவன மேலாண்மை

குட்டிகள் மண் தின்பதை தவிர்ப்பதற்கு தாது உப்புக் கட்டியை சுவைக்க பழக்க வேண்டும். மூன்று வார வயதுள்ள கன்றுகளுக்கு தரமான பசும்புல் கொடுக்க வேண்டும். எட்டு வார வயதுள்ள கன்றுகளுக்கு வைக்கோல் கொடுக்கலாம். கன்றுகளுக்கு சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். வெயில் காலங்களில் மரத்தழைகளை கொடுக்கலாம். மூன்று மாத வயதுள்ள கன்றுகளுக்கு பசுந்தீவனம், உலர்த்தீவனத்துடன் தினமும் குறைந்தது ½ கிலோ அடர்தீவனம் கொடுத்து வளர்க்க வேண்டும். கன்று குட்டிகளின் வளர்ச்சிக்கு தாது உப்பு அவசியம். ஆகவே தாது உப்பை தீவனங்களோடு சேர்த்து கொடுக்க வேண்டும். இப்படியான தீவன மேலாண்மையை கடைபிடித்து வந்தால் 'இன்றைய கன்று நாளைய பசு' என்ற பழமொழிக்கேற்ப வளர்த்து நல்ல இலாபத்தைக் கொடுக்கும்.கன்று ஈன்ற பின் கொடுக்க வேண்டிய சமச்சீர் உணவு

மாடு கன்று ஈன்ற பிறகு இரண்டு - மூன்று நாள் கழித்து தேங்காய், உளுந்து இரண்டையும் உரலில் போட்டு ஆட்டிக் கொடுக்கலாம். இது பசுவின் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஒரு சுரைக்காய், 100 கிராம் வெந்தயம், ½ கிலோ பனைவெல்லம் இந்த மூன்றையும் உரலில் போட்டு ஆட்டி ஒரு வேளைக்கு கொடுக்கலாம். இது போல் தொடர்ந்து ஒருவாரம் கொடுத்து வந்தால் மாட்டின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.பசு கன்று பராமரிப்பிற்கான முடிவுரை

வழிமுறைகளில் முறையாக கன்றுகளை பராமரித்து வளர்த்தால், இளம் கன்றுகள் சீரான முறையில் ஆரோக்கியமாக வளர்ந்து இரண்டரை முதல் மூன்று வருட காலத்தில் ஒரு நல்ல கறவை மாட்டின் பருவத்தை அடையும்.

"இளம் கன்றுகளை பேணிக் காப்போம்

வருமானம் பெறுவோம்".