வாழ்நாள் கல்வி

ஆடுகளுக்கான தடுப்பூசிகள் அதன் பயன்கள்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


ஆடுகளுக்கான தடுப்பூசிகள் அதன் பயன்களுக்கான முன்னுரை

 • காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
 • போலக் கெடும்' –குறள்
 • ஒரு செயலானாலும் இடர் வருமுன் அதை அறிந்து தடுக்காதவன் வாழ்வு நெருப்பு முன் வைத்த வைக்கோல் போல எரிந்துவிடும் என்பது இதன் பொருள். நாம் வளர்க்கும் வெள்ளாடுகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக இருந்து நல்ல வருவாயை கொடுக்க வேண்டுமென்றால் நோய் தாக்கம் தோன்று முன் தடுப்பூசி போடவேண்டும். அதை தான் வருமுன் காப்போம் என்று சொல்கிறோம். காமன் வெல்த் ஆஃப் லேன்ங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல்; நிறுவனத்தின் மூலம் ஆடுகளுக்கான தடுப்பூசிகள் அதன் பயன்கள் பத்தி வாய்ஸ் மெயில்களாக உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.


கோமாரிநோய் மற்றும் துள்ளுமாரி நோய்

 • நோய்க்கான தடுப்பூசியை, மூன்று மாத வயதில் முதல் தடுப்பூசியும் பின்னர் ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படியும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் தடுப்பூசி போடவேண்டும்.
 • நோய்க்கான தடுப்பூசியை நான்கு மாத வயதிலும், வருடம் ஒருமுறையும், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும் தடுப்பூசி போடவேண்டும். 


ஆட்டம்மை நோய் மற்றும் அடைப்பான் நோய்

 • நோய்க்கான தடுப்பூசியை மூன்று மாத வயதிலும், வருடம் ஒருமுறையும் நோய் கண்ட இடங்களில் போடவேண்டும்.
 • நோய்க்கான தடுப்பூசியை ஆறு மாத வயதில் நோய் கிளர்ச்சியின் போது மட்டும், நோய் கண்ட பகுதிகளில் வருடம் ஒருமுறை  ஆகஸ்டு மாதம் மழைக்காலத்திற்கு முன்பு போடவேண்டும்.


ஆட்டு கொல்லி நோய்(பி.பி.ஆர்) மற்றும் இரண ஜன்னி நோய்

 • நோய்க்கான தடுப்பூசியை ஐந்து மாத வயதிலும், வருடம் ஒருமுறையும் ஜூன் மாதத்தில் போடவேண்டும்.
 • நோய்க்கான தடுப்பூசியை, குட்டிகள் பிறந்த இரண்டு அல்லது மூன்றாவது நாளில் ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனே இந்தத் தடுப்பூசியை போடவேண்டும்.


ஆடுகளுக்கான தடுப்பூசிகள் அதன் பயன்களுக்கான முடிவுரை

 • வளர்ப்பில் ஆடுகளுக்கு வரும் நோய்களான கோமாரி நோய், துள்ளுமாரி நோய், ஆட்டம்மை நோய், அடைப்பான் நோய், ஆட்டுக் கொல்லி நோய்,(பி.பி.ஆர்) இரணஜன்னி போன்ற செய்திகளை காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல் நிறுவனத்தின் மூலமா உங்களுக்கு வாய்ஸ்மெயில்களாக தொகுத்து கொடுத்துள்ள தகவல்களை கேட்டீர்கள்.  இதை பின்பற்றி ஆடுகளை வளர்த்தால் ஆடுகள் ஆரோக்கியமாகவும் நல்ல திடகாத்திரமாகவும் வளரும்.  நல்ல இலாபம் பெறலாம்.
 • ஆடுகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்
 • ; வாழ்வோம்'