வாழ்நாள் கல்வி

ஆட்டு எருவின் பயன்கள்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


ஆட்டு எருவின் பயன்களுக்கான முன்னுரை

எரு செய்யுறது போல் இனத்தான் செய்ய மாட்டான்

'ஆட்டு எரு அந்த வெள்ளாமைக்கு

மாட்டு எரு மறு வெள்ளாமைக்கு' – இந்த பழமொழிகள் மண்ணுக்கு உரமிடுவதை பற்றிக் கூறுகிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகினால்தான் மண் வளமாகி பயிர்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.  காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல் நிறுவனம் மூலம் ஆட்டு எருவின் பயன்கள் கிடைபோடுதல் தகவல்களை வாய்ஸ் மெயில்களாக உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.இயற்கை விவசாய முறையில் கால்நடை கழிவுகளின் பங்கு

முன்னோர்கள் கால்நடைகளின் கழிவுகள் மற்றும் விவசாய விளை பொருள்களின் கழிவுகளை கொண்டு விவசாயம் செய்து வந்தனர். 'அடி மண்ணுக்கு, நடு மாட்டுக்கு, நுனி மனிதர்களுக்கு' என்ற பழமொழிக்கேற்ப தாவரங்களின் அடிபகுதியை மண்ணுக்கு உரமாக போட்டனர் அத்துடன் ஆடு, மாடுகளின் சாணத்தை எருக்குழியில் போட்டு மக்க வைத்து நிலத்திற்கு அடி உரமாக போட்டு வந்தனர். அந்த வகையில் மாட்டு சாணத்தை விட ஆட்டு சாணத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.ஆட்டு சாணத்தின் பயன்கள்

ஆடுகள் நிலத்தில் விளையும் எல்லா வகையான செடி, கொடிகள், புல் பூண்டுகள், மூலிகைச் செடிகள், மர இலைகள் எல்லாவற்றையும் தின்று உயிர் வாழ்கின்றது. அதனால் இந்த ஆடுகளின் சாணத்தில் தாது சத்துக்கள் பொட்டாசியம், மெக்னிசீயம், பொட்டாஷ; மற்றும் நுண்சத்துகள் அதிகம் உள்ளது. இது மண்ணில் மிக வேகமாக மக்கி மண்ணோடு சேர்ந்து உரமாகி விடுகிறது. இது பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது பயிர் வளர்ச்சிக்கு நன்றாக துணை புரிகிறது. ஆட்டு எருவு அந்த வெள்ளாமைக்கு: மாட்டு எருவு மறு வெள்ளாமைக்கு என்னும் பழமொழியில் இருந்து அதன்பயன் நன்கு விளங்குகிறது.ஆட்டுக்கிடை

ஆடுகள் பகல் முழுவதும் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து விட்டு வருகிது. அதை இரவு முழுவதும் விளை நிலங்களில் தங்க வைப்பது தான் கிடைபோடுதல் ஆகும். இப்படி இரவு நேரங்களில் விளை நிலங்களில் கிடைபோடுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கின்றது. ஆட்டு உரிமையாளருக்கு ஒரு வருமானம் கிடைக்கிறது. அது அன்றாட செலவுகளை சரிக்கட்டுகிறது. ஆட்டுக்கிடையின் பயன்கள்

ஆடுகளை இரவு நேரங்களில் தங்க வைப்பதால் இரவில் மூன்று அல்லது நான்கு தடவை ஆடுகள் சிறு நீர் கழிக்கும். இந்த ஆட்டின் சிறுநீரில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நுண் ஊட்டசத்துகள் அதிகம் உள்ளது. குறிப்பாக மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் ஜிங்சல்பேட் போன்ற உப்புசத்துக்கள் அதிகம் உள்ளதால் மண்வளமாகிறது. ஆட்டு சாணம் மற்றும் சிறு நீரும் சேர்ந்து மண்ணின் வளத்தை கூட்டுகிறது. இது பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை உடனடியாக கிடைக்கச் செய்கிறது. ஒரு முறை ஆட்டுக் கிடை போட்டால், அடுத்த இரண்டு வெள்ளாமைக்கு அடியுரம் போட வேண்டியதில்லை. ஆக ஆட்டுக்கிடை போடுவதால் ஆட்டு உரிமையாளருக்கு ஒரு வருமானமும், நில உரிமையாளருக்கு நிலமும் வளமாகிறதுஆட்டு எருவின் பயன்களின் இயற்கை விவசாய முறைகள்

பசுமை புரட்சி என்னும் பெயரில் நிலத்தில் பல இலட்சக்கணக்கான டன் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டதால் மண்ணில் இருந்த நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து மண் மலடாக மாறிக் கொண்டு வருகிறது. இந்த நுண்ணுயிர்களின் பெருக்கம்தான் மண்ணின் உயிர்தன்மையை நிலைநிறுத்தும். அந்த உயிர்தன்மையை உருவாக்குவது கால்நடைகளின் கழிவுகள் மூலம் தான் உண்டாகும். ஆகவே வளமான வாழ்விற்கு விவசாயம் செழிக்க வேண்டும். அந்த விவசாயம் இயற்கை முறையில் இருக்க வேண்டும். அந்த இயற்கை முறை விவசாயத்திற்கு 'கால்நடைகளை வளர்ப்போம், கழனி செழிக்க வைப்போம்.ஆட்டு எருவின் பயன்களுக்கான முடிவுரை

மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆட்டு எருவின் பயன்கள், கிடை போடுதல், இயற்கை விவசாய முறைகள் பற்றி காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல் நிறுவனத்தின் மூலமாக உங்களுக்கு வாய்ஸ்மெயில்களாக தொகுத்து வழங்கியுள்ளோம்.  இது உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

'ஆட்டு எருவை பயன்படுத்துவோம்

அதிகமான விளைச்சலை பெறுவோம்';