வாழ்நாள் கல்வி

மாடுவளர்ப்பு

கால்நடை - மாடுவளர்ப்பு

மாடுவளர்ப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


மாடுவளர்ப்பு முன்னுரை

மாடு வளர்ப்பு என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும்.  கால்நடைகளினால் கிடைக்கும் எரு, கோமியம் ஆகியவை சிறந்த இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது.  மாடு வளர்ப்பு பற்றிய தகவல்களை இந்தப் பாடத்தில் காணலாம்.

 

கொட்டகை அமைத்தல்

1.                  கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் ஈரப்பதம் இன்றி வறட்சியாக அமைக்க வேண்டும்.

2.                  அடைமழை போன்ற பெரு மழையின் போது நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் கூடாரம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3.                  இதனுடைய சுவர்கள் 1.5 x 2 மீ உயரம் இருக்க வேண்டும்.

4.                  இந்தக் கூடாரத்தின் சுவர்கள் ஈரம் கசியாத வண்ணம் பூசியிருக்க வேண்டும்.

5.                  கொட்டகையின் கூரை 3-4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

6.                  தரை சரியான / கடினமான வழுக்காத சிறந்த முறையாக (3 செ.மீ.) நீர் வடிய கூடிய முறையில் எளிதில் உலரும்படியாகவும் சரிவாக அமைக்க வேண்டும்.

7.                  கால்நடைகளுக்கான தீவனத் தொட்டி 1.05 மீட்டர் இடத்திலும் அதன் முன் உயரம் 0.5 மீட்டர் மற்றும் அதன் ஆழம் 0.25 மீட்டர் அளவிலும் இருக்க வேண்டும்

8.                  வெயில் காலங்களிலும் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்

9.                  மாட்டு தொழுவம் சிறந்த காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.  குளிர் காலத்தில் இரவு நேரத்திலும், மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.

10.              நாள்தோறும் கால்நடைகளுக்கு தனித்தனி கிடைப்பட்டி ஒதுக்க வேண்டும்.

11.              குளிர்காலத்தில் இரவு நேரத்திலும் மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.

12.              கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும்.

13.              கால்நடைகளின் சிறுநீர் சிறிய குழிகளில் சேகரிக்கப்பட்டு பின் அதை விவசாயத்திற்காக பாசனக் கால்வாயில் சேர்க்க வேண்டும்.

14.              கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சாண எரிவாயு கலனை சிறந்த முறையில அமைக்க வேண்டும்.  சாண எரிவாயு கலன் என்பது சாணத்துடன் பண்ணை கழிவுகள் கால்நடை கழிவுகளை சேர்த்து தயாரிப்பதாகும்

15.              கால்நடைகளுக்கு தேவையான இடைவெளி ஒதுக்க வேண்டும்.

 

கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை

தகுந்த கால்நடை வளர்ப்பவரிடமிருந்தோ அல்லது அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

 

கறவை மாடுகளுக்கான உணவளித்தல்

1. ஒரு நாளிற்கு போதுமான அளவில் பசுந்தீவனம் வழங்க வேண்டும்.

2. கூடுமானவரை நம் நிலத்தில் வளரக்கூடிய பசுந்தீவனம் அல்லது எங்கு கிடைக்குமோ அங்கிருந்துப் பெற்று தர வேண்டும்.

3. பசுந்தீவனத்தை அதனுடைய சரியான வளர்ச்சியில் வெட்ட வேண்டு;ம்.

4. மேய்ச்சல் தீனி வழங்குவதற்கு முன் நார் உணவாக நெல் பதர்களை வழங்க வேண்டும்.

5. தானியங்களை நொறுக்கி அடர் தீவனமாக வழங்க வேண்டும்.

6. எண்ணெய் பிண்ணாக்கு கரகரப்பாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

7. ஈரமாக்கப்பட்ட அடர் தீவனத்தை உணவளித்தலுக்கு முன் வழங்க வேண்டும்.

8. போதுமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் தர வேண்டும். கனிம கலவையுடன் போதுமான அடர் உணவுகள் தாது உப்புகளையும் தர வேண்டும்.

9. போதுமான மற்றும் சுத்தமான நீர் வழங்க வேண்டும்.

 

 

நோய்க்கு எதிரான தடுப்பு முறைகள்

1. கால்நடைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உணவு உட்கொள்ளுதல் குறைவாகவும், காய்ச்சல், வழக்கத்திற்கு மாறாக களைப்புடனும், வழக்கத்திற்கு மாறான நடவடிக்கiயுடனும் காண்ப்பட்டால் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும்.

2. நோய்வாய்ப்பட்டிருப்பதாக எண்ணினால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ உதவி மையத்தை அணுகி உதவி கோரலாம்.

3. ஒரு வேளை எதிர்பாராமல் ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால் உடனடியாக நோய் தாக்கப்பட்டட கால்நடையை மற்ற கால்நடைகளிpலருந்து பிரித்து தனியாக பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

4. புரூசெல்லா நோய், எலும்புருக்கி நோய், மடியழற்சி நோய் போன்ற நோய்களுக்கு சரியான கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

5. குடற்புழு நீங்க மருந்துகளை தவறாமல் வழங்க வேண்டும்.

6. கொட்டகையில் ஈக்களின் தொல்லையை தடுக்க கருவாட்டு கரைசலை பாட்டிலில் கட்டி தொங்க விட வேண்டும்.

7. கால்நடைகளை ஒவ்வொரு நேரமும் சுத்தப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும்.

 

இனப்பெருக்க கால பராமரிப்பு

1. கால்நடைகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உணவு உட்கொள்ளுதல் குறைவாகவும், காய்ச்சல், வழக்கத்திற்கு மாறாக களைப்புடனும், வழக்கத்திற்கு மாறான நடவடிக்கiயுடனும் காண்ப்பட்டால் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும்.

2. நோய்வாய்ப்பட்டிருப்பதாக எண்ணினால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ உதவி மையத்தை அணுகி உதவி கோரலாம்.

3. ஒரு வேளை எதிர்பாராமல் ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால் உடனடியாக நோய் தாக்கப்பட்டட கால்நடையை மற்ற கால்நடைகளிpலருந்து பிரித்து தனியாக பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

4. புரூசெல்லா நோய், எலும்புருக்கி நோய், மடியழற்சி நோய் போன்ற நோய்களுக்கு சரியான கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

5. குடற்புழு நீங்க மருந்துகளை தவறாமல் வழங்க வேண்டும்.

6. கொட்டகையில் ஈக்களின் தொல்லையை தடுக்க கருவாட்டு கரைசலை பாட்டிலில் கட்டி தொங்க விட வேண்டும்.

7. கால்நடைகளை ஒவ்வொரு நேரமும் சுத்தப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும்.

 

கன்று குட்டிகளை பராமரித்தல்

1. புதிதாக பிறந்த கன்றை மிகவும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்

2. தொப்புள் கொடியை கூர்மையானக் கத்தி கொண்டு வெட்ட வேண்டும். அதே சமயத்தில் நோய் தொற்று தாக்காமல் இருக்க அயோடின் கரைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

3. கன்று பிறந்த 30 நிமிடத்தில் முலைப்பாலுட்ட வேண்டும். கன்று மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தால் பால் குடிக்க உதவ வேண்டும்.

4. கன்றிற்கு சீம்பாலை கண்டிப்பாக தர வேண்டும்.

5. கன்று பிறந்த உடனே முலைப்பால் குடிக்க மறுத்தால் பிறகு அதை குடிக்க வைப்பதற்காக முலைப்பாலை பக்கெட்டில் சேமிக்க வேண்டும்.

6. கன்று பிறந்த 2 மாதத்திற்கு அதை தனியாக வறண்ட சுத்தமான மற்றும் நல்ல காற்றோற்ட்டம் உள்ள பகுதியில் பராமரிக்க வேண்டும்.

7. அதிகப்படியான சீதோஷ்ண நிலையிலிருந்து கன்றை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அதுவும் முதல் 2 மாத கன்றை நன்கு பராமரிக்க வேண்டும்.

8. கன்றுகளை அதன் பரிணாம அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.

9. கன்றுகளுக்குத் தடுப்பு மருந்துகளைத் தரவேண்டும்.

10. கன்று பிறந்த 4-5 நாட்களுக்குள் அதற்கு கொம்பு வெட்டி சீர் செய்ய வேண்டும். வளர, வளரஅதை கையாளுவது சுலபமாக இருக்கும்.

11. தேவைக்கு அதிகமாக வளர்க்க முடியாத கன்றுகளை அப்புறப்படுத்தி விட வேண்டும.; ஏதேனும் தனிப்பட்டட காரணத்திற்காக பராமரிக்க வேண்டியிருந்தால் பராமரிக்கவும் குறிப்பாக காளை கன்றுகளை.

12. பசு கன்றுகளை தகுந்த முறையில் வளர்க்க வேண்டும்.

 

மாடுவளர்ப்பு முடிவுரை

சிறுகுறு விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் மாடு வளர்ப்புத் தொழிலை சிறப்பாக செய்து இன்றியமையாத பால் உற்பத்தியை பெருக்குவோம்.  வாழ்வில் வளம் பெறுவோம்.