வாழ்நாள் கல்வி

கம்பெனியின் இயக்குநர்கள்

கம்பெனியின் இயக்குநர்கள்

கம்பெனியின் இயக்குநர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


கம்பெனியின் இயக்குநர்கள் முன்னுரை

ஒரு கம்பெனியில் உண்மையான உரிமையாளர் பங்குதாரர்களே. இந்த பங்குதாரர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்து கம்பெனியை நடத்துவது என்பது சற்று கடினமானதாகும். ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளான MLA, MP-க்களை நேர்ந்தெடுப்பது போல் கம்பெனியில் அன்றாட செயல்பாட்டிற்கு சிலரை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இயக்குநர்கள் ஆவர். இந்த  இயக்குநர்கள் கம்பெனியின் மூளையாவார்கள். இந்த பாடத்திட்டத்தில் இயக்குநர்கள் அவர்களின் கடமைகள் உரிமைகள் தகுதிகள் பற்றி காணலாம்.

 

இயக்குநர் சொல் விளக்கம்

கம்பெனியின் விவகாரங்களை கட்டுப்படுத்துதல், மேலாதிக்கம் செலுத்துதல் போன்ற பணிகளை செய்பவர்கள் இயக்குநர்கள் என்பது ஆகும்.

 

இயக்குநர் அவை

இயக்குநர்கள் அனைவரையும் இயக்குநர் அவை என குறிப்பிடுவர் இயக்குநர்களின் எண்ணிக்கை 12-க்கும் அதிகமாக போனால் மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.

 

இயக்குநரின் தகுதிகள்

தனி நபர்களை மட்டுமே இயக்குநர்களாக நியமிக்க முடியும். இயக்குநராக நியமிக்கப்பட்டவர் குறைந்த பட்சம் ஒரு பங்கையாவது வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பங்கின் மதிப்பு ரூ. 5000-க்கு மேல் போகக்கூடாது.

 

இயக்குநர் நியமனம்

முதல் இயக்குநர் கம்பெனி பதிவு செய்யப்படும் போது அதன் அமைப்பு சாசனத்தில் முதல் கையெழுத்து இட்டவர்கள் அனைவரும் முதல் இயக்குநராக கருதப்படுவர். முதல் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு புது இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர்களில் மறு வருடம் யார் பதவி விலகுவது என கலந்து பேசி அவர்களுக்கு பதிலாக புதிய இயக்குநர்கள் நியமனம் செய்யப்படவில்லையெனில் பழைய இயக்குநர்களே தொடரலாம்

 

வெளியார் செய்யும் நியமனம்

கம்பெனிகளுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்படும் இயக்குநர்கள் என வெளியார் நியமன இயக்குநர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவர். இவர்கள் கம்பெனியின் நிதிநிலை அறிக்கை பற்றிய தகவல்களை தங்களை நியமித்த அமைப்புக்கு அனுப்புவர்.

 

இயக்குநர்களின் அடையான எண்

ஒவ்வொரு இயக்குநருக்கும் (DIN) என்ற அடையான எண்ணுக்கு விண்ணபித்து அடையான எண்ணை பெற வேண்டும்.

 

 

சட்டம் விதித்துள்ள கடமைகள்

இயக்குநர்களின் கடமைகளும் பொறுப்புகளும்:

கடமைகள் இரண்டு வகைப்படும்

1. சட்டம் விதித்துள்ள கடமைகள்

2. இதர கடமைகள்

1. இயக்கநர் இயக்குநர் அவைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பட்டவர் ஆவார்.

2. கம்பெனியின் நிதி நிலையை கண்காணித்தல்

3. கம்பெனியில் சட்டப்படி நடத்த வேண்டிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கம்பெனியின் அறிக்கையை தயார் செய்து கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும்

4. கம்பெனியின் இலாப நஷ;ட கணக்கு இருப்பு நிலைக்குறிப்பு ஆகியவற்றை தயாரித்து அவற்றிற்கு சான்றுறுதி அளித்து ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

5. பங்காதாயம் சிபாரிசு செய்யும் உரிமை உள்ளது

6. ஒவ்வொரு இயக்குநரும் செயல்முறை விதிகளில் விதிக்கப்பட்டுள்ளப்படி தகுதி பங்குகளை வாங்க வேண்டிய கடமை உள்ளது

 

இதர கடமைகள்

கம்பெனியின் வியாபார இரகசியங்களை தனது சொந்த நலனுக்கு பயன்படுத்தக் கூடாது. நேர்மையாக நடக்க வேண்டும் அதிகார துஷ;பிரயோகம் செய்யக்கூடாது. இயக்குநர்கள் கம்பெனி விசயங்களில் கவனத்துடனும் முன் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

 

இயக்குநர்கள் பதவி இழப்பு அல்லது விலகல்

கீழ்காணும் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும்போது இயக்குநர் பதிவியிலிருந்து விலக்கப்படுவர்

1. தகுதி பங்குகளை பெற்றுக்கொள்ளாமல் இருத்தல்

2. மனநிலை பாதிக்கப்பட்டவர் என நீதி மன்றத்தால் கண்டுபிடித்தால்

3. நொடித்தவராக அறிவிக்கமுயன்றால் அல்லது அறிவிக்கப்பட்டு  இருந்தால்

4. நீதி மன்றத்தால் ஏதேனும் ஒழுக்ககேட்டிற்கு 6 மாதத்திற்கு மேல் தண்டனை பெற்று இருந்தால்

5. தொடர்ந்து மூன்று இயக்குனரவை கூட்டத்திற்கு வருகை தராமல் இருந்தால்

இதுபோன்ற சூழல் ஏற்படுமேயானால் கம்பெனி உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் இயக்குநரை பதவி நீக்கம் செய்யலாம்.

 

கம்பெனியின் இயக்குநர்கள் முடிவுரை

இந்த  பாடத்திட்டத்தில் கண்டுள்ளபடி இயக்குநர் என்பவர் தன் உரிமைகள், கடமைகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டால் உற்பத்தியாளர் கம்பெனி மென்மேலும் வளர்ந்து உறுப்பினர்கள் இயக்குநர்கள் மற்றும் இவர்களை சார்ந்தவர்கள் வளமான வாழ்வு பெறலாம்.