வாழ்நாள் கல்வி

பால்மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணமும் தடுப்பு முறைகளும்

பால்மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணமும் தடுப்பு முறைகளும்

பால்மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணமும் தடுப்பு முறைகளும்

Facebook twitter googleplus pinterest LinkedIn


பால்மாடுகளின் நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணமும் தடுப்பு முறைகளும் முன்னுரை

உயரினங்கள் கருவுற்று இருக்கும் போது தாய் உண்ணும் உணவு தொப்புள் கொடி மூலம் கருவில் உள்ள சிசுவிற்கு கடத்தப்படுகிறது கன்று ஈன்றவுடன் தொப்புள் கொடியை கத்திரித்து தாயையும் கன்றையும் பிரிக்கின்றனர் கர்பபையில் உள்ள காலி செய்யப்பட வேண்டிய பொருள் நச்சுக்கொடி இந்த நஞ்சுகொடி கன்று ஈன்ற நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் வெளியில் வந்துவிடும். இந்த பாடத்திட்டத்தில் நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணிகளையும் தடுப்பு முறைகளையும் பார்க்கலாம்

 

நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணிகள்

மாடுகள் சினைபருவத்தில் சமசீரான சத்துக்கள் கொண்ட தீவனம் கொடுக்க வேண்டும். அப்பொழுதான் கருவில் உள்ள கன்று நன்கு வளரும் அதோடு மாடுகள் உடல் மற்றும் கருவளர்ச்சிக்கு தாது உப்புகள், நுண்ணுட்டசத்துகள் மிகவும் அவசியம். அவற்றில் குறைபாடுகள் ஏற்படும் போது கன்று ஈன்றவுடன் நஞ்சுக்கொடி விழுவதில் தாமதம் ஏற்படும். இதைதான் நஞ்சுக்கொடி தங்குதல் என அழைக்கிறோம் ஆக நஞ்சுக்கொடி தங்குவதற்கு காரணம் சத்துகுறைவான தீவனங்கள் தாது உப்பு பற்றாக்குறை ஆகும். கன்று ஈன்ற நான்கு முதல் ஆறு மணிநேர இடைவெளியில் நஞ்சுக்கொடி தானாக வெளிவந்துவிடும். அவ்வாறு இல்லையெனில் கால்நடை மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டும் கன்று ஈன்றவுடன் கருப்பபை சுருங்குவதால் எளிதில் ஜீரணமாகக்கூடிய வெதுவெதுப்பான நீர் கஞ்சி, கூழ் செய்து கொடுக்கலாம். சில நேரங்களில் மாட்டின் உரிமையாளரின் கவனக்குறைவால் மாடுகள் நஞ்சுக்கொடியை தின்றுவிடும். இதனால் மாடுகளுக்கு அஜீரண கோளாறு ஏற்படும்.

 

மரபுசார் மருத்துவம்

மரபுசார் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம் என்னும் நல்ல பலனைக் கொடுக்கக்கூடியது இதில் நோய் எதிர்ப்பு சக்தியையும் மாடுகளுக்கு கொடுக்கும்.

1. எள் செடியின் இலை காய்ந்த காய் சருகு ஆகியவற்றை அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாடுகளுக்கு வாய் வழி உள்ளே கொடுக்கலாம். இந்த மருந்து கொடுத்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாக விழுந்துவிடும்.

2. ½ கிலோ அளவு வெண்டைகாயை மாடுகளுக்கு தின்ன கொடுக்கலாம். இதை கொடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி விழுந்து விடும்.

3. 100 கிராம் எள்ளை 100 கிராம் வெல்லத்துடன் சேர்த்து இடித்து உருண்டையாக்கி வாய் வழி கொடுக்கலாம். இந்த மருந்து கொடுத்த ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் நஞ்சுக்கொடி தானாக விழுந்துவிடும்.

4. யானை நெருஞ்சி செடி 200 கிராம் எடுத்து நறுக்கி ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து கலக்க வேண்டும்; அவ்வாறு கலக்கும் போது சோப்பு போன்ற நுரையுடன் கூடிய திரவம் வரும் இந்த கலக்கிய நீரை மாட்டுக்கு வாய் வழியே உள்ளுக்கு கொடுக்க வேண்டும். இந்த மூலிகை திரவம் கொடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி வெளியில் வந்துவிடும். நஞ்சுக்கொடி வெளிதள்ளப்பட்பவுடன் அதை கவனமாக அப்புறபடுத்தி குழி தோண்டி புதைத்து விட வேண்டும். அடுத்து ஈன்ற மாட்டிற்கு கொடுக்கும் தீவனத்தில் புரசத்து மாவுசத்து மற்றும் எரிசக்தி உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தாது உப்புகள், நுண்ணூட்ட சத்துக்களை தவறாது கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்தால் அடுத்த ஈற்றில் இந்த நஞ்சுக்கொடி பிரச்சனை வராது.

 

பால்மாடுகளின் நஞ்சுக்கொடி தங்குவதற்கான காரணமும் தடுப்பு முறைகளும் முடிவுரை

இந்தப் பாடத்திட்டத்தில் கூறியுள்ளபடி மாடுகளுக்கு தீவன மேலாண்மை செய்து வந்தால் நஞ்சுக்கொடி தங்குதல் பிரச்சனை வராது. மாடுகளும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் பால் வளம் கூடும் பண்ணையாளருக்கும் வருமானமும் கூடும்.