வாழ்நாள் கல்வி

பால்மாடுகளில் பால்காய்சல் மற்றும் தடுப்பு முறைகள்

பால்மாடுகளில் பால்காய்சல் மற்றும் தடுப்பு முறைகள்

பால்மாடுகளில் பால்காய்சல் மற்றும் தடுப்பு முறைகள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


பால்மாடுகளில் பால்காய்சல் மற்றும் தடுப்பு முறைகள் முன்னுரை

பால்மாடுகளுக்கு சமச்சீர் தீவனம் கொடுத்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். சத்துக்கள் குறையும் போது பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். பால்மாடுகளில் ஏற்படும் ஒரு நோய் பால்காய்சல் ஆகும். இந்த நோய் ஏற்பட காரணம் அதற்கான தடுப்பு முறை பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் பார்க்கலாம்.

 

பால்காய்சலுக்கான காரணம்

பால் அதிகமாக கொடுக்கும் கலப்பின மாடுகளில் தான் இந்த பால் காய்ச்சல் தாக்குதல் அதிகமாக காணப்படும். மாடு பால் கறக்கும் போது மாட்டின் உடலில் உள்ள சுண்ணாம்பு சத்தும் சேர்ந்து பால் மூலம் வெளியாகும். சினை மாடுகளுக்கு சரியான தீவனம் கொடுக்காமல் இருந்தாலும் பால்காய்ச்சல் ஏற்படும். இந்த சுண்ணாம்பு சத்து இழப்பை ஈடு செய்ய சுண்ணாம்பு சத்து மிகுந்த தீவனங்கள் கொடுக்க வேண்டும். முதல் மூன்று ஈற்று வரை மாடுகளுக்கு இந்த பிரச்சனை இருந்தாலும் அந்த தாக்கம் அதிகம் தெரிவதில்லை. மூன்றாவது ஈற்றில் மாடுகளுக்கு உடம்பில் சுண்ணாம்பு சத்து முழுவதுமாக குறைந்து போவதால் கன்று ஈன்றவுடன் எழுந்து நிற்க முடியாமல் மாடு படுத்துவிடும்.

 

நோய் அறிகுறிகள்

பால் அதிகமாக கறக்கும் மாடுகளில் சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்படும் போது அவை கொட்டகையில் உள்ள இடுக்குகள் மூங்கில் கம்புகள் பழைய துணிகள் இவைகளை கடிக்க ஆரம்பிக்கும் இந்த அறிகுறிகள் தெரிந்தால் அந்த மாடுகளுக்கு பால்காய்ச்சல் நோய் வர வாய்ப்புகள் உள்ளது என அறிந்து கொண்டு அவைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும்.

 

தீவன அளவு

பால்காய்ச்சலை தடுக்க பால் மாடுக்கு கொடுக்க வேண்டிய தீவன அளவு

புல் வகை பசுந்தீவனம் 20 கிலோ

புல் வகை உலர் தீவனம் மூன்று கிலோ

புல் வகை அடர்தீவனம் நான்கு கிலோ

மெக்னீசியம் சல்பேட் உப்பு 100 கிராம். இந்த வகையான தீவனத்தில் நேர்மின் அயன்கள் அதிகம் உள்ளதால் அடர்தீவனம் 2 கிலோ அளவும் உலர்தீவனம் சற்று அதிகமாகவும் கொடுக்க வேண்டும் இது போன்ற தீவன மேலாண்மையை கடைபிடித்து வந்தால் பால்மாடுகளை பால்காய்ச்சல் நோயிலிருந்து காப்பாற்றலாம்.

 

தடுப்பு முறைகள்

பால்மாடுகளில் பால்காய்ச்சல் நோய் கண்டவுடன் கால்நடைமருத்துவரை அணுகி சுண்ணாம்பு சக்தை ஈடுகட்ட சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த டானிக்குகளை உடனடியாக வாய்வழி கொடுக்கலாம். அல்லது ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தலாம். ஒரு கிலோ புது சுண்ணாம்பை வாங்கி 10 லிட்டர் தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த ஊறிய நீரில் தெளிந்த நீர் ஒரு லிட்டர் அளவு எடுத்து மாட்டுக்கு வாய்வழியாக கொடுக்கலாம். இவ்வாறு இந்த தண்ணீரை தொடர்ந்து ஒரு வராம் கொடுக்கலாம். ஒரு வாரம் கழித்து இதே போல புது சுண்ணாம்பு ஒரு கிலோ வாங்கி 10 லிட்டர் நீரில் ஊறவைத்து முன்போல தெளிந்த நீரை எடுத்து மீண்டும் ஒரு வாரம் கொடுக்கலாம். இந்த முறையில் வைத்தியம் செய்துவந்தால் மாட்டின் உடலின் சுண்ணாம்பு சத்து அதிகரித்து நன்றாக பால் கொடுக்கும்.

 

பால்மாடுகளில் பால்காய்சல் மற்றும் தடுப்பு முறைகள் முடிவுரை

இந்தப் பாடத்திட்டத்தில் கொடுத்துள்ள கருத்துக்கள் படி பால்மாடுகளுக்கு முறையான சமச்சீர் தீவனமும் கொடுத்து வளர்க்க வேண்டும். இதையும் மீறி மாடுகளுக்கு பால்காய்ச்சல் நோய் ஏற்பட்டால் இந்த வைத்திய முறைகளை செய்து மாடுகளை பால்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.