வாழ்நாள் கல்வி

கோமாரி நோய்கான மரபுசார் மருத்துவம்

கோமாரி நோய்கான மரபுசார் மருத்துவம்

கோமாரி நோய்கான மரபுசார் மருத்துவம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


கோமாரி நோய்கான மரபுசார் மருத்துவம் முன்னுரை

 கோமாரி நோய் என்னும் கணை நோய் பிளவுபட்ட குளம்புகளைக் கொண்ட ஆடு, மாடுகளை தாக்கும் இதற்கு கால், வாய் காளை என ஒரு பெயரும் உண்டு ஆங்கிலத்தில் (Foot and mouth disease) என அழைக்கப்படுகிறது.  இந்த நோய்க்கான மரபுசார் மருத்துவ முறைகள் பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் காண்போம்

 

நோய் அறிகுறிகள்

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளின் வாயிலிருந்து உமிழ்நீர் அதிகம் வெளிவரும் கால் குளம்புகளின் இடைவெளி வாய் பகுதிகள் சிறு கொப்புளங்கள் தோன்றி புண்ணாகிவிடும் அந்த புண்களில் சீழ் பிடித்து வடியும். இதனால் ஆடு, மாடுகள் நடக்க சிரமப்பட்டு நொண்டும்.

 

மரபுசார் மருத்துவம்

தேவையான பொருட்கள்

1.             புதிதாக அறுவடை செய்த மஞ்சள் கிழங்கு – 200 கிராம்

2.             நன்கு விளைந்த ஒரு தேங்காயின் துருவல்

3.             சோற்றுகற்றாழை மடல் 200 கிராம்

4.             வெல்லம் 200கிராம்

5.             சமையல் உப்பு 100 கிராம்

6.             மிளகு 50 கிராம்

7.             சீரகம் 50 கிராம்

8.             வெள்ளைப்பூண்டு 100 கிராம்

9.             வெந்தயம் 50 கிராம்

செய்முறை: மிக்சியில் வைத்து தேங்காய் துருவல் சோற்றுக்கற்றாழை மஞ்சள் கிழங்கு, பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து தேவையான அளவு நீர்கலந்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தூள் செய்து வெல்லத்துடன் கலந்து முதல் கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1 லிட்டர் அளவு வைத்துக் கொள்ளவும் இதனை வடிகட்டி பெரிய மாடுகளுக்கு 100 மில்லி கன்றுகள் ஆடுகளுக்கு 50 மில்லி அளவு கொடுக்கலாம்.

மூலிகை தாவரத்தை கொடுப்பதற்கு முன் மாடுகளுக்கு 50 மில்லி நல்லெண்ணையில் ஊறிய வாழைபழம் இரண்டும் ஆடுகளுக்கு 1 வாழைபழும் வாய்வழி கொடுக்கவும் இதை ஒரு நாளைக்கு 2 வேளை விதம் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை விதம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு கொடுக்கவும்

 

கால்குளம்பு வாய்புண்ணுக்கான தைலம் தயாரித்தல்

தேவையான பொருட்கள்

1.             நல்லெண்ணெய் 1 லிட்டர்

2.             மஞ்சள் கிழங்கு 200 கிராம் அல்லது மஞ்சள் பொடி 50 கிராம்

3.             வெளளைப்பூண்டு  59 கிராம்

4.             வேப்பிலை 100

5.             மருதாணி இலை 10

மேற்கண்ட மூலிகை இவைகளுடன் பூண்டு சேர்த்து அரைத்து கலந்து வைக்கவும் இந்த கலவையில் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தபின் ஆறவிட்டு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இந்த மூலிகை  எண்ணையை பூசுவதற்க முன் புண் பகுதிகளை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்துவிட்டு பின்னர் புண்களில் பூசவும். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பூசி வரவும்.

 

இரண்டாவது முறை- தைலம் தயாரித்தல்

தேங்காய் எண்ணெய் 500 மல்லி ஊமத்தை இலைசாறு 500 மில்லி இந்த இரண்டையும் கலந்து எண்ணெய் பதம் வரும் வரை 1 மணிநேரம் கொதிக்க விடவும் பின் இறக்கி வைத்து அத்துடன் 5 கிராம் அளவு மயில் துத்தத்துடன் கலந்து நன்றாக கலக்கவும். இந்த தைலத்தை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம் இந்த தைலத்தை கோமாரி நோய் புண்களுக்கு மட்டும் அல்லாமல் பிற வகையான புண்களுக்கும் பயன்படுத்தலாம்.

 

உணவு

நோய் பாதித்த கால்நடைகளுக்கு தீவனம் திங்க முடியாது ஆகையால் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு குருனைகளை கொறி கஞ்சியாக்கி தினமும் 100 கிராம் முதல் 200 கிராம் வரை குடிநீரில் கலந்து கொடுக்கலாம்.

 

கோமாரி நோய்கான மரபுசார் மருத்துவம் முடிவுரை

இந்தப் பாடத்திட்டத்தில் கொடுத்துள்ளபடி மரபுசார் மருந்துவம் செய்யும்போது கால்நடைகளின் நோய் தீர்வதுடன் அவைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. இதனால் கால்நடைகள் ஆரோக்கியமாக வளரும். பண்ணையில் லாபம் பெருகும்