வாழ்நாள் கல்வி

ஆடுகளில் ஏற்படும் நோயை குணப்படுத்தும் எளிய முறை

ஆடுகளில் ஏற்படும் நோயை குணப்படுத்தும் எளிய முறை

ஆடுகளில் ஏற்படும் நோயை குணப்படுத்தும் எளிய முறை

Facebook twitter googleplus pinterest LinkedIn


ஆடுகளில் ஏற்படும் நோயை குணப்படுத்தும் எளிய முறை முன்னுரை

நாம் வளர்க்கும் ஆடுகள் வளர்ப்பவருக்கு இலாபத்தை கொடுக்க வேண்டுமெனில் ஆடுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி அவைகள் ஆரோக்கியமாக வளர நோய் தடுப்பு என்பது மிகவும் அவசியம் இந்தப் பாடத்திட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் எளிய முறைகள் பற்றி பார்க்கலாம்.

 

ஆடுகளுக்கு நோய் தாக்கம் ஏற்பட காரணங்கள்

கொட்டகை சுத்தம் இல்லாமல் இருந்தால் நோய் தாக்குதல் ஏற்படும்.  கொட்டகை காற்றோட்ட வசதி இல்லாமல் இருந்தாலும் அதிகபடியான ஆடுகளை கொட்டகையில் அடைத்தாலும் நோய் தாக்குதல் உண்டாகும். மேலும் ஆடுகளுக்கு சரியான தீவனம் கொடுக்காவிட்டாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தாக்குதல் ஏற்படும். ஆடுகளுக்கு அதிகமான சோறு, அழுகிய காய்கறிகள் கொடுத்தாலும் அஜீரணம் ஏற்பட்டு நோய் தாக்குதல் ஏற்படும். புஞ்ஞானம், உள்ள தீவனம் கெட்டுப்போன தீவனங்களை தின்றாலும் நோய் தாக்குதல் உருவாகும்.

 

நோய்கள் - குணப்படுத்தும் முறைகள்

கோமாரி நோய் இந்த நோய் காற்றின் மூலம் பரவும். பிளவுபட்ட குளம்பு உள்ள கால்நடைகளை அதிகம் தாக்கும். நோய்கண்ட ஆடுகளை தனியாக பிரித்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோய்க்கு மழைகாலம் தொடங்குவதற்கு முன் தடுப்பூசிபோட வேண்டும். கோமாரி நோய் தாக்கிய ஆடுகளுக்கு புண்ணில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு கழுவி வேப்ப எண்ணெய் தடவ வேண்டும். வாய் புண் அதிகம் இருப்பதால் ஆடுகளுக்கு கம்பு, கேழ்வரகு கூழ் காய்ச்சி இளம் சூட்டில் கொடுக்க வேண்டும்.

 

மடிவீக்க நோய்

இந்த நோய் ஒரு தொற்று நோய் ஆகும். நோயின் ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்யாவிட்டால் பெரிய பாதிப்பு உண்டாகும். இதை தடுக்க பால் கொடுக்கும் ஆடுகளுக்கு பால் கொடுத்தவுடன் படுக்கவிடக் கூடாது. ஏனென்றால் திறந்த பால் காம்புகள் மூட சிறிது நேரம் ஆகும்.  பால் கொடுத்து முடிந்தவுடன் ஆடுகளுக்கு பசுந்தீவனம் அல்லது உலர்தீவனம் கொடுக்கும் அந்த நேரத்தில் பால் காம்புகள் மூடிக் கொள்ளும்.  இதனால் மடிநோய் தாக்கததிலிருந்து மாடுகளை பாதுகாக்கலாம்.  நோய் தாக்கிய ஆடுகளுக்கு சோற்று கற்றாழை மடல், மஞ்சள் பொடி 50 கிராம் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து எடுத்து பால் மடியில் தடவி வர வேண்டும்.

 

வயிறு உப்புசம்

ஆடுகளுக்கு வயிற்று உப்புசம் ஏற்பட்டால் முதல் உதவியாக 100 மில்லி கடலை எண்ணெய் வாய் வழியாக புரை ஏறாமல் கொடுக்க வேண்டும். இரண்டு வெற்றிலையுடன் 5 மிளகு வைத்து அரைத்து 100 மில்லி தண்ணீரில் கலக்கி வாய் வழி கொடுக்கலாம். மழைக் காலங்களில் அதிக அளவு உலர் தீவனம் கொடுக்க வேண்டும்.

 

வயிற்றுப்போக்கு

காக்சிடியா என்னும் ஒரின ஒட்டுண்ணியால் இந்த நோய் ஏற்படுகிறது. இதைத் தடுக்க காக்சிடியாவை கொல்ல தேவையான மருந்து கொடுக்கலாம். 3 கத்திரிக்காயை கூட்டு ஆடுகளுக்கு கொடுத்தால் கழிச்சல் நோய் நிற்கும் கொட்டகையில் சுத்தமான தீவனம் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும் வேப்பங்கொழுந்து, கொய்யாகொழுந்து ஆவாரம் கொழுந்து ஒவ்வொன்றும் கைபிடி அளவு எடுத்து சீரகம் 10 கிராம் வெல்லம் 100 கிராம் சேர்த்து அரைத்து உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.

 

குடற்புழு நீக்கம்

குடற் புழுக்களில் கொக்கிப்புழு, உருண்டைபுழு, நாடாபுழு தட்டைபுழு என பலவகை உள்ளது. இவைகளின் தாக்கத்தால் ஆடுகள் மெலிந்து இரத்த சோகை ஏற்படும். நாளடைவில் மரணம் கூட ஏற்படும்.  இதற்கு இராசாயன பூச்சி கொல்லியைவிட மூலிகை வைத்தியம் நல்லது. நொச்சி இலை 1 கிலோ சோற்றுகற்றாழை மடல் 1 வேப்பங்கொட்டை விதை சிறிது அளவு, சங்குங்குப்பி இலை 1 கிலோ, எருக்கு இலை 1 கிலோ இந்த மூலிகைகளை தண்ணீர் தெளித்து தனித்தனியே அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்த மூலிகை கலவையை ஒன்று சேர்த்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.  இந்த கலவையை ஆட்டிற்கு 20 மில்லி அளவு வாய் வழி புரையேறாதபடி கொடுக்கலாம். மூன்று மாத வயதிற்கும் குறைவான குட்டிகளுக்கு 10 மில்லி கொடுக்கலாம்.

 

அடைப்பான் தொண்டை அடைப்பான் துள்ளுமாரி நோய்கள்

இந்த வகையான நோய்கள் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரிகளினால் உண்டாகக்கூடியது இந்த நோய்களுக்கு மழை காலம் மற்றும் கோடைகாலம் தொடங்குமுன் தடுப்பூசிகள் போட வேண்டும்.

 

உண்ணிகள் பேன்கள் செல்கள்

ஆடுகளின் தோல் பகுதிகளில் உரோமத்திற்குள் மறைந்து இருந்தும், கால் குளம்புகள் காது மடல்கள் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு இரத்ததை உறுஞ்சி வாழும். இதனால் கால்நடைகள் இரத்த இழப்பால் மெலிந்து மரணத்தை கூட சந்திக்காலம்.

 

வைத்தியம்

வெள்ளைப்பூண்டு, துளசி, வேப்பிலை, மஞ்சள் பொடி, சீத்தாப்பழ விதைகள் வகைக்கு 10 முதல் 20 கிராம் அளவு எடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் 250 மில்லி வேப்ப எண்ணெயை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த மூலிகை கலந்த கலவையை ஆடுகளுக்கு மேல் தோலில் பூசி விட வேண்டும்.

 

காய்ச்சல்

அறிகுறிகள் கால்கள் மற்றும் உடம்பில் நடுக்கம் ஏற்படுதல், உரோம் குத்திட்டு மேல் நோக்கி இருத்தல் கண்களில் நீர் சொருகுதல் ஆடுகள் படுத்தே இருக்கும்

 

சிகிச்சை முறை

ஓமம், கஸ்தூரி மஞ்சள், வெள்ளைப்பூண்டு, மிளகு இந்த நான்கிலும் 5 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து சூடுநீரில் கலந்து ஆடுகளின் வயதிற்கேற்ற அளவு மருந்தை வாய் மூலம் உள்ளே ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்க வேண்டும்.

 

ஆடுகளில் ஏற்படும் நோயை குணப்படுத்தும் எளிய முறை முடிவுரை

ஆடுகளுக்கு ஏற்படும் சிறியதும் மற்றும் பெரியதுமான நோய்களுக்கு எளிய முறை வைத்திய முறைகளை செய்யும் போது ஆடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி ஆடுகள் ஆரோக்கியமாக வளரும். செலவுகள் குறைவதால் பொருளாதார சேமிப்பும் உண்டாகும். இதன் மூலம் பண்ணையாளருக்கும் நல்ல இலாபமும் கிடைக்கும்.