வாழ்நாள் கல்வி

பால்மாடுகளில் ஏற்படும் குடற்புழு தாக்கம் மற்றும் நீக்கும் முறைகள்

பால்மாடுகளில் ஏற்படும் குடற்புழு தாக்கம் மற்றும் நீக்கும் முறைகள்

பால்மாடுகளில் ஏற்படும் குடற்புழு தாக்கம் மற்றும் நீக்கும் முறைகள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


பால்மாடுகளில் ஏற்படும் குடற்புழு தாக்கம் மற்றும் நீக்கும் முறைகள் முன்னுரை

உயிரினங்கள் அனைத்திலும் குடற் புழுக்கள் என்பது வளரக்கூடியது.  குடற்புழுக்களில் மூன்று வகை உள்ளது.  அவை தட்டைபுழு, நாடாப்புழு, உருண்டைபுழு என மூன்று வகைப்படும். இளம் கன்று முதல் இந்த பெரிய ஆடு மாடு வரை இந்த புழுக்களின் தாக்கம் உள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில் குடற் புழுக்களினால் ஏற்படும் தாக்கம் அதை நீக்கும் முறைகள் பற்றி பார்க்கலாம்.

 

குடற் புழுக்கள் தாக்கத்தின் அறிகுறிகள்

பால்மாடுகளில் இந்த குடல் புழுக்களின் எண்ணிக்கை அதிகமானால் அவை தின்னும் தீவனத்தில் உள்ள சத்துக்களை உறிஞ்சிவிடும். இதனால் கால்நடைகளில் இரத்தம் குறைந்து வளர்ச்சி பாதிக்கப்படும்

1.             ஆடு மாடுகள் மெலிந்து காணப்படும்

2.             உடலில் உரோமங்கள் பெரிதாக இருக்கும்

3.             சாணம் துர்நாற்றத்துடன் வெளியேறும்

4.             சாணத்தில் உயிருடன் சிறிய அளவில் புழுக்கள் காணப்படும்

 

காரணங்கள்

ஆடு மாட்டின் சாணத்தில் இருந்து வெளிவரும் புழுக்கள் மண்ணில் பல நாட்கள் வாழும். அந்த இடங்களில் ஆடுகள் மேயும் போது புல்களின் மூலம் வயிற்றுக்குள் சென்று பல்கி பெருகி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகை புழுக்கள் கால்நடைகளின் இரத்தத்தை உறிஞ்சி இரத்த சோகையை உண்டாக்குகிறது. பாதிப்பு அதிகமானால் நாளடைவில் கால்நடைகள் மரணத்தை சந்திக்க நேரிடும்

 

வைத்தியம்

தேவையான மூலிகைகள்

நொச்சி இலை 1- கிலோ

சோற்றுகற்றாழை மடல் 1- கிலோ

வேப்பக்கொட்டை 1- கிலோ

சங்கங் குப்பி 1- கிலோ

எருக்க இலை 1- கிலோ

 

செய்முறை

இந்த 5 வகை மூலிகைளையும் சிறிது தண்ணீர் தெளித்து தனித்தனியே அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவைகளை ஒன்று சேர்த்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த மூலிகை கரைசலை ஆட்டிற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய 20 மில்லி அளவு வாய்வழி கொடுக்க வேண்டும். மூன்று மாதம் வயதுக்கு குறைவான குட்டிகளுக்கு 10 மிலி போதும் பெரிய மாடுகளுக்கு 50 மில்லி கொடுக்கலாம். இந்த மருந்தை 23 மாதம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இந்த மூலிகை மருந்து குடற் புழுக்களை நீக்கம் செய்வதுடன் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது இதனால் கால்நடைகள் நன்கு தீவனம் தின்னும். சாணம் கெட்டியாக போடும்.  இதனால் கால்நடைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

 

ஆங்கில மருத்துவமுறை

கால்நடைகளின் சாணத்தை மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து அதில் காணப்படும் புழுக்களை பொறுத்து 21 நாட்களுக்கு ஒரு முறை மூன்று தடவை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குடற்புழு நீக்கம் மருந்தை கொடுக்க வேண்டும். ஒரே வகையான மருந்தை பயன்படுத்தாமல் ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு வகை மருந்தை கொடுத்தால் புழுக்களில் உண்டாகும் எதிர்ப்பு திறன் குறைந்து புழுக்கள் வெளியேறும்.

 

பால்மாடுகளில் ஏற்படும் குடற்புழு தாக்கம் மற்றும் நீக்கும் முறைகள் முடிவுரை

இந்த பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி சித்த மருத்துவம் ஆங்கில வைத்தியம் என இரு வகை முறைகளை பயன்படுத்தி பால் மாடுகளில் கன்று முதல் பால்மாடு வரை தேவையான அளவு மருந்துகளை கொடுத்து குடற் புழு நீக்கம் செய்து பால்மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் அடையலாம்.