வாழ்நாள் கல்வி

பால்மாடு வளர்ப்பில் வருடம் ஒரு கன்று

பால்மாடு வளர்ப்பில் வருடம் ஒரு கன்று

பால்மாடு வளர்ப்பில் வருடம் ஒரு கன்று

Facebook twitter googleplus pinterest LinkedIn


பால்மாடு வளர்ப்பில் வருடம் ஒரு கன்று முன்னுரை

பால்மாடு வளர்ப்பவர் தொடர்ந்து பால்மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட பண்ணையில் மாடுகள் வருடம் ஒரு கன்று ஈன்று பண்ணையில் எண்ணிக்கை கூட வேண்டும். அப்போது தான் பண்ணையில் இலாபம் பெருகும். இந்த வருடம் ஒரு கன்று என்னும் செயலுக்கு தடையாக இருப்பது இனப்பெருக்க பராமரிப்பு இன்மையே காரணமாகும். இந்த பாடத்திட்டத்தில் அதுபற்றி காண்போம்

வருடம் ஒரு கன்று பெற பால்மாடு வளர்ப்பவர் மூன்று சமயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்

•              கன்று ஈனும் சமயம்

•              கன்று ஈன்றவுடன்

•              கன்று ஈன்ற 60 – 90 நாட்கள்

இதைப்பற்றி காணலாமா

 

கன்று ஈனும் சமயம்

கன்று ஈனும் சமயத்தில் ஏற்படும் சிறிய பராமரிப்பு குறைவு கூட பசுவுக்கும் கன்றுக்கும் சேதத்தை உண்டாக்கும்.  ஆகவே கன்று ஈனும் சமயம் பராமரிப்பு மிகவும் முக்கியம். மாடு கன்று ஈனும் அறிகுறிகள் வெளிப்படுத்தியவுடன் பிற மாடுகளிலிருந்து பிரித்து சுகாதாரமாக உள்ள இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். பசுவின் பிறப்பு உறுப்பில் கன்றின் தோற்றம் தெரிந்த 2 மணி நேரத்திற்குள் கன்று வெளியே வராவிட்டால் கால்நடை மருந்துவரை அணுகி தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். சுய வைத்தியம் செய்யக்கூடாது. அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அடுத்த கருத்தரிப்பு தள்ளிப்போகும்.

 

கன்று ஈன்றவுடன்

கன்று ஈன்றபின் இரண்டு காரணங்கள் பசுக்கள் அடுத்த சினை பிடிப்பதில் பிரச்சனை ஏற்படுத்தி விடும்.

1.             நஞ்சுக்கொடி தங்குதல்

2.             கருப்பையில் புண் ஏற்படுதல்

 

நஞ்சுக்கொடி தங்குதல்

பசு ஈன்ற 8 மணி நேரத்திற்குள் நஞ்சுகொடி தானாக விழுந்துவிழும். அவ்வாறு விழவில்லை எனில் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நஞ்சுக்கொடியை கைக்கொண்டு இழுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இப்படி செய்யும் போது நஞ்சுக்கொடியில் ஒரு பகுதி கருப்பையில் தங்கி அழுகி புண் ஏற்படும். இது அடுத்து மாடுகள் சினைபருவத்திற்கு வருவது காலதாமதம் ஆகலாம். நாட்டு வைத்திய முறையில் ½ கிலோ வெண்டைக்காயை மாட்டுக்கு கொடுக்கலாம். அல்லது எள் சருகை அரைத்து தண்ணியில கலந்து கொடுக்கலாம்.

 

கருப்பைபுண்

மாடுகள் ஈனும் சமயம் சுதாகாரமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் நஞ்சுக்கொடி தங்குதல் போன்ற காரணங்களில் கருப்பையில் புண் ஏற்பட்டு சீழ் வடியும். இதற்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

 

தீவன மேலாண்மை

கன்று ஈன்ற மாடுகளுக்கு சத்துகள் மிகுந்த சமச்சீர் தீவனம் கொடுக்கவேண்டும் பசுந்தீவனம், அடர்தீவனம், உலர் தீவனம் என முறையாக கொடுக்க வேண்டும். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும். பசுந்தீவனத்தில் அகத்தி, சூபாபுல், காராமணி போன்வை 15 கிலோ உலர்தீவனம் 5 கிலோவும் மற்றும் அடர்தீவனம் சுமார் 3 முதல் 4 கிலோ வரை கொடுக்க வேண்டும்.

 

சூலகத்தில் கட்டி

பால்மாடு கன்று ஈன்ற 45 முதல் 60 நாட்களுக்குள் மீண்டும் சினைக்கு வர வேண்டும் அவ்வாறு வரவில்லை என்றால் காரணம் சூலகத்தில் கட்டி இருக்கும். இந்த மாதிரியான மாடுகள் கால்நடை மருத்துவரைக் கொண்டு பரிசோதனை செய்து சூலகக்கட்டியை அகற்ற சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்

 

கன்று ஈன்ற 60-90 நாட்கள்

பசுக்கள் கன்று ஈன்றபின் கருப்பை சுருங்கி பழைய நிலைமைக்கு வர 45 – 60 நாட்கள் ஆகும். அப்போது சினைப் பருவ அறிகுறி தென்படும் இந்த மாதிரி சினைப்பருவ அறிகுறி தென்பட்டால்  24 மணி நேரத்திற்குள் கருவூட்டல் செய்ய வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால் மாடுகளின் சினைப்படுவது தாமதமாகும் இதனால் வருடம் ஒரு கன்று என்னும் குறிக்கோளை செயல்படுத்த முடியாமல் போய்விடும்

 

பால்மாடு வளர்ப்பில் வருடம் ஒரு கன்று முடிவுரை

வருடம் ஒரு கன்று என்னும் நோக்கம் செயல்பட வேண்டுமென்றால், இந்த பாடதிட்டத்தில் கூறியுள்ளவற்றை சரியாக செயல்படுத்தி வந்தால் பண்ணையில் வருடம் ஒரு கன்று என்பது சாத்தியமாகி பண்ணையில் நல்ல இலாபம் அடையலாம். பால் கறவையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்