வாழ்நாள் கல்வி

நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


நாட்டுக்கோழியின் முன்னுரை

 நாட்டுக்கோழிகள் இறைச்சிக்காகவும், முட்டை உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தற்பொழுது பிராய்லர் கோழி மற்றும் முட்டைக்கோழி வளர்ப்பைப் போன்று நாட்டுக்கோழிகளுமட தீவிர முறையில் வளர்க்கப்படுகின்றன. பிராய்லர் கோழிகளுடன் ஒப்பிடும்போது இதன் இறைச்சியில் கொழுப்புச்சத்து சற்று குறைவாகவும், புரதச்சத்து கூடுதலாகவும் உள்ளது. முனித உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்;கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.  உணவு விடுதிகளில் நாட்டுக்கோழி இறைச்சியில் வௌ;வேறு உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்கபடுகிறது.  நாட்டுக்கோழிகளின் இறைச்சி, எலும்புகளின் சுவை மற்றும் நறுமணம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதால்; அதற்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.  நாட்டுக்கோழி வளர்ப்பவர்களின் பொருளாதாரமும் உயருகிறது.

 

நாட்டுக்கோழியின் தன்மை

நாட்டுக்கோழிகள் இயற்கையாகவே குறைந்த எடை மற்றும் குறைந்த அளவு முட்டையிடும் தன்மை கொண்டவை. இதன் வளர்ச்சியும் மெதுவாக இருக்கும்.  நாட்டுக்கோழிகள் மண்ணில் இருக்கும் புழு, பூச்சிகள் வேண்டாத களைகள் மற்றும் கால்நடைகளை பாதிக்கும் புற ஒட்டுண்ணிகளை கொத்தித் தின்பதால் சுற்றுப்புறம் தூய்மையடைகிறது.  இது கோழிகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. 22 வார வயதில் பருவமடைந்து முட்டையிடத் தொடங்கும்.  வருடத்திற்கு 60-70 முட்டைகள் வரை இடும்.  முட்டையின் எடை 45-60 கிராம் எடையுடன் பழுப்பு நிறத்தில் இருக்கும்.  முட்டையில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் மனித உடல் வளர்ச்சிக்கு உகந்தது.  முட்டை உற்பத்திக்கு நல்ல தரமான பெட்டை மற்றும் சேவல் 8:1 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும்.  குஞ்சு பொரிப்பு காலம் 21 நாட்கள்.  பிறந்த குஞ்சின் எடை 30-32 கிராம் வரை இருக்கும்.  குஞ்சு பொரித்தல் கோழிகள் அடைக்காத்தல் மூலமாகவோ அல்லது குஞ்சு பொரிக்கும் இயந்திரத்தின் மூலமாகவோ செய்யலாம்.

 

நாட்டுக்கோழி இனங்கள்

நாட்டுக்கோழி இனங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அசில் என்கிற சண்டைக் கோழி, கடக்நாத் என்கிற கருங்கால் கோழி (கலமாசி), பங்ரா, சிட்டகாங், நிக்கோபாரி மற்றும் மொட்டைக்கழுத்துக் கோழி போன்ற இனங்கள் உண்டு. வௌ;வேறு வகையான தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழியினங்கள் பல வண்ணங்களில் தற்போது உள்ளது.

 

கோழி வளர்ப்பு முறைகளின் வகைகள்

புறக்கடை வளர்ப்பு முறை :

இம்முறை வீட்டின் பின்பகுதிகளில் திறந்த வெளியில் வளர்ப்பதாகும். 

மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை :

வெளியில் மேயும் கோழிகளுக்கு கொட்டகையில் இரை கொடுத்து வளர்த்தல்.

கொட்டகையில் ஆழ்கூள வளர்ப்பு முறை :

கொட்டகை அமைத்து அதில் நெல் உமி, தென்னை நார் கழிவு, கடலைப்பொட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி, அதில் குஞ்சுகள் மற்றும் கோழிகளை வளர்க்கும் முறை.

கூண்டு வளர்ப்பு முறை :

கூண்டு கட்டி அதனுள் கழிவுகள் வெளியேற இடம் அமைத்து, கூண்டுக்குள்ளேயே வைத்து இரை கொடுத்து வளர்க்கும் முறையாகும்.

 

நாட்டுக்கோழிக் கொட்டகை அமைத்தல்

இறைச்சிக்கான நாட்டுக்கோழிகளை வளர்ப்பதற்கு, ஒரு சதுர அடி இடமும், முட்டை கோழிகளுக்கு இரண்ட சதுர அடி இடமும் தேவை. கொட்டகையின் நீளம், அகலம் 25:20 என்ற அளவில் இருக்கவேண்டும்.  உயரம் 6 அடி முதல் 8 அடி வரை இருக்கலாம்.  கோட்டகையின் மேற்கூரை பகுதி தென்னை ஓலைக் கொண்டும் அல்லது 10 அடி உயரத்தில் தகரம் கொண்டும்  அமைக்கலாம்.  துரைப்பகுதி ஒன்று முதல் இரண்டு அடி இருக்கவேண்டும்.  இது மழைக் காலத்தில் கொட்டகையில் ஈரக்கசிவு மற்றும் மழை நீர் புகுவதைத் தடுக்கும்.  பக்கவாட்டில் ஒரு அடி உயரமுள்ள சுவற்றில் பாம்பு, கீரி போன்றவைகள் புகாமல் இருக்க கோழி வலைகள் கொண்டு அமைக்கவேண்டும்.  தரைப்பகுதி நல்ல கெட்டியான கான்க்ரீட் கொண்டு அமைக்கவேண்டும்.  இது கழிவுகளை எளிதில் அப்புறப்படுத்தவும், சுத்தம் செய்யவும் உதவும். 

 

நாட்டுக்கோழியின் இளம் குஞ்சுகள் பராமரிப்பு

இளம் குஞ்சுகள் வளர்க்கும் அறையை சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்து காயவைக்க வேண்டும்.  தரையில் நெல் உமி அல்லது தென்னை நார் கழிவுகளை பரப்பி அதன் மேல் செய்தித் தாள்களை விரிக்கவேண்டும்.  ஒரு அடி உயரமுள்ள தகடுகள் கொண்டு புருடர் வட்டம் அமைக்கவேண்டும்.  1.5மீ விட்டமுள்ள புருடர் வட்டத்தில் 200 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.  இளம் குஞ்சுகளுக்கு ஆரம்ப காலத்தில் 92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொடுக்கவேண்டும்.  இரண்டு வார வயதுள்ள குஞ்சுகளுக்கு 87 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வரை கொடுக்கலாம்.  வேப்பத்திற்கு மின் விளக்குகள் அல்லது கரிப் பானைகளை உபயோகப்படுத்தலாம்.  மூன்று நாட்களுக்குப் பிறகு செய்தித் தாள்களை அகற்றிவிட்டு, நெல் உமி அல்லது ஆழ்கூளத்தில் குஞ்சுகளை வைக்கலாம்.  ஒரு வார வயதில் புருடர் வட்டத்தை நீக்கிவிடலாம்.  இரண்டு வார வயது குஞ்சுகளுக்கு இரவில் மட்டும் வெப்பம் கொடுத்தால் போதுமானது.  ஆரம்பத்தில் குஞ்சுகளின் வளர்ச்சிக்கு காய்ச்சி ஆற வைத்த நீரில், ஒரு லிட்டருக்கு 50 கிராம் வீதம் குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.  20 நாள் வயதுக்குப் பின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு எதிரி உயரி மருந்துகள், வைட்டமின் சத்துகள் மற்றும் ஜீரண சக்தி மருந்துகளை தண்ணீரில் கலந்துக்  கொடுக்கலாம்.  கோழி தீவனத்தில் சிறுதானியங்கள், காய்கறிகளின் கழிவுகள், மீன் கழிவுகள், தவிடுகள் ஆகியவற்றை சேர்த்துக் கொடுக்கும்போது வளர்ச்சி நன்றாக இருக்கும்.

 

நாட்டுக்கோழியின் நோய் தடுப்பு முறைகள்

நாட்டுக் கோழிகளை நச்சுயிரி நோய்களான வெள்ளைக் கழிச்சல், கோழி அம்மை போன்றவைகளும், நுண்ணுயிரி நோய்களான, கோழி சால்மோனெல்லோசிஸ், கோழி காலரா போன்றவைகளும், இரத்த கழிச்சல் ஒட்டுண்ணி நோய்களும் தாக்கும்.  இதைத் தடுக்க தடுப்பூசிகள் முன்னரே போடவேண்டும்.  வேப்ப இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைத்து குடிநீருடன் கலந்துக் கொடுக்கலாம்.  இரத்தக் கழிச்சலைத் தடுக்க புளித்த மோரில் சிறிய வெங்காயத்தை வெட்டிப்போட்டு ஊறவைத்துக் கொடுக்கலாம்.  இத்துடன் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கான தடுப்பூசிகளை முறைப்படிப் போடவேண்டும்.

 

நாட்டுக்கோழிக்கு தீவனம் அளித்தல்

ஆரம்ப நிலையில், குஞ்சுகளுக்குத் தீவனத்தை செய்தித்தாள்கள் மேல் பரப்பிவிட்டுக் கொடுக்கலாம்.  பின்னர் தீனித் தட்டுகளில் கொடுக்கலாம்.  ஒரு கிலோ கோழி தீவனத்தில் 22 சதவீதம் புரதமும், எரிசக்தி 2750 கலோரி இருக்குமாறு தயாரித்;துக் கொடுக்கவேண்டும்.

 

நாட்டுக்கோழியின் விற்பனை

நாட்டுக்கோழிகளை ஐந்து மாத வயதில் தொடங்கி ஆறு மாத வயதிற்குள் விற்றுவிட வேண்டும்.   இந்த பருவத்தில் கோழிகள் மூன்றரை முதல் நான்கு கிலோ தீவனங்கள் தின்று 1.1 முதல் 1.5 கிலோ எடை வரை வளர்ந்திருக்கும்.  ஆறு மாத வயதிற்கு மேலுள்ள கோழிகளின் எலும்பு முற்றி விடுவதால் விற்பனை செய்வது கடினம். அதிகமான தீனியை உட்கொண்டு குறைவான உடல் வளர்ச்சியை கொடுக்கும்.  அதனால் தீவனச் செலவு அதிகரிக்கும். 

 

நாட்டுக்கோழியின் முடிவுரை

Daily an egg keep the Doctor away என்னும் பழமொழிக்கேற்ப அதாவது தினம் ஒரு முட்டை உட்கொண்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை. இத்தகைய நன்மைகள் நிறைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு முறையில் கொட்டகை அமைப்பு, இளம்குஞ்சுப் பராமரிப்பு, தீவனம் அளித்தல் மற்றும் நோய்த்தடுப்பு ஆகியவற்றில் விஞ்ஞானத் தொழில்நுட்பங்களைப் பண்ணையாளர்கள் கடைப்பிக்கும் போது இறப்பு விகிதத்தைக் குறைத்துப் பொருளாதார இழப்பைத் தவிர்த்துக் வருவாய் பெறலாம். நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றிற்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பைப் பயன்படுத்தி அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் பெறலாம்.