வாழ்நாள் கல்வி

விவசாய உற்பத்தியாளர் கம்பெனிக்கான கடன் திட்ட அறிக்கை தயாரித்தல்

விவசாய உற்பத்தியாளர் கம்பெனி

விவசாய உற்பத்தியாளர் கம்பெனிக்கான கடன் திட்ட அறிக்கை தயாரித்தல்

Facebook twitter googleplus pinterest LinkedIn


விவசாய உற்பத்தியாளர் கம்பெனிக்கான வங்கிக்கடன் திட்ட அறிக்கை தயாரித்தலுக்கான முன்னுரை

முறையான தொடக்கம் பாதி வெற்றி என்பார்கள்.  ஒரு செயலை சிறப்பாக செய்திட சரியாக திட்டமிட்டு எடுத்துச் சென்றால் வெற்றி கிடைக்கும்.  அதேபோல், விவசாய உற்பத்தியாளர் கம்பெனியின் செயல்பாடுகளை நன்கு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.  கம்பெனியின் வியாபாரத்திற்கு திட்ட வரைவு முறையாக செய்யவேண்டும்.  கம்பெனியின் வியாபாரத்திற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், அதை எந்தெந்த செயலுக்கு பிரித்து முறையாக செய்வது, வருமானம் எவ்வளவு வரும் கடனை முறையாக எத்தனை ஆண்டுகளில் திரும்ப செலுத்துவது கடனை திரும்ப செலுத்தியபின் கம்பெனியின் இலாபம் எவ்வாறு என்பதற்கான திட்டமிடலே கம்பெனியின் வியாபாரக் கடன் திட்டமிடலாகும். 

 

திட்ட அறிக்கை தயாரித்தலுக்கான கம்பெனி அறிமுகம்

கடன் கொடுக்கும் நிறுவனத்திற்கு நமது கம்பெனி ஏன் உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது? உறுப்பினர்கள் யார்? அவர்களது பொது நோக்கம் தொலைநோக்குப் பார்வை, குறிக்கோள்கள், பதிவு விபரம்? செயல்பாடுகள், செயல்படுத்தப்போகும் விதம் போன்ற விபரங்கள் தெரிவிப்பதே இதன் நோக்கமாகும்.

 

கம்பெனியை பற்றிய விளக்கம்

கம்பெனி அமைப்பு, கட்டமைப்பு, பதிவு விபரம், கம்பெனி அங்கீகாரம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது, பொறுப்பாளர்கள் பற்றிய விபரம், கம்பெனியின் சட்ட வடிவமைப்பு போன்ற விபரங்கள் இதில் இருக்கவேண்டும்

 

வியாபார சந்தை தொடர்பான விபரம்

கம்பெனியின் வியாபாரம் எது? ஆதற்கான விற்பனை எவ்வாறு நடக்கின்றது, நமது உற்பத்தி என்ன?  அதற்கான விற்பனை வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது.  நமது வியாபாரம் யாருடன் போட்டியிடப்போகிறது.  அதை எவ்வாறு எடுத்துச் சொல்லப்போகிறோம்.  இலாபகரமான விற்பனையை எவ்வாறு நடத்த உள்ளோம்.  அதற்கான செயல்பாட்டுக் கொள்கைகள்  நமது வியாபாரத்திற்கும் சமுதாயத்தில் வியாபாரம் எப்படி நடந்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கான விளக்கமும் இருக்கவேண்டும்.

 

கம்பெனியின் நிர்வாகம்

நிறுவனத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், நிர்வாகம் செயல்படும் விதம், பொறுப்பாளர்களின் கடமைகளும், பொறுப்புகளும் அவைகளை முறையாக நிர்வகிக்கும் விளக்கம் இதில் இருக்கவேண்டும். 

 

கம்பெனி சேவை மற்றும் உற்பத்தி

கம்பெனி உறுப்பினர்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உறுப்பினர்களுக்கு செய்யப்போகும் சேவைகள் உறுப்பினர்களுக்கு முறையான சேவை, சேவையின் அளவு, விரிவாக்கம் அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்தல், வியாபார சந்தையை விரிவுபடுத்துதல், இலாபத்தை அதிகரித்தல், பயன்பெறுபவர்களின் அளவும் விரிந்துக் கொண்டே செல்வதைக் குறிப்பிட வேண்டும். 

 

விற்பனையை செயல்படுத்தப்போகும் விதம்

என்ன விற்பனை? உற்பத்தியாளர் யார்? நுகர்வோரின் தேவை என்ன? தேவைகளை ஈடுகட்டும் விதம்? எத்தனை மையங்கள் அமைத்து விற்பனை செய்யும் விதம் எத்தனை நுகர்வோர்கள், கிராமம் அவர்களுக்கு திருப்திகரமான தரம் வாய்ந்த பொருள்கள் அளிப்பது போன்ற விபரம் இருத்தல் வேண்டும்.

 

தேவைப்படும் நிதி

கம்பெனியின் வியாபாரத்திற்கு தேவையான மொத்த நிதி?  மூலதனம், நிலையான மூலதனம் எவ்வளவு?  தொடர்ந்து தேவைப்படும் மூலதனம், ஆண்டு வாரியாக தேவை கடன் கால அளவு, கடன் திருப்பம், அசல், வட்டி விபரம், எத்தனை ஆண்டிற்குள் கடன் திரும்ப செலுத்தப்படும்.  ஓவ்வொரு ஆண்டும் எவ்வளவு இலாபம் வரும்.  வருட கடன் திரும்ப செலுத்திய பின்னர் எவ்வளவு இலாபம். முழுமையான கடன் திருப்பத்திற்கு பின் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதற்கான விபரம்.  இறுதியில் Debit Service Ratio (DSR) அதாவது முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதற்கான விளக்கம்.  கடன் அளிக்கும் நிறுவனம், ஒரு முதலீடு செய்ததில் குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு இலாபம் காட்டும் கடன் திட்ட அறிக்கைக்கு கடன் அளிக்க விரும்பும். 

 

நிதி தேவையின் அளவு மற்றும் செலவினங்கள் விபரம்

கடன் திட்டத்தின் நிதி தேவை, அதன் அளவு, வருடத்திற்கு கிடைக்கப்போகும் இலாபம் அதாவது வரவுகள், செலவுகள் பற்றிய கண்ணோட்டம் கொடுக்கவேண்டும்.  செலவுகளை விட வரவுகள் அதிகமாக கிடைக்கும் திட்ட அறிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.  கடன் கொடுக்கும் நிறுவனம் தங்களிடம் கடன் பெற்ற கம்பெனி கடனை முறையாக செலுத்தியபின் கம்பெனியின் சொத்து இலாபம் அதிகரிக்க வேண்டும் என்பதையே வரவேற்கும். 

 

இணைப்புகள்

கடனை நியாயப்படுத்தும் விதத்தில் கம்பெனி தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விபரம், உறுப்பினர்களின் விபரம், கம்பெனிக்கான பான் கார்டு (PAN card) விரிவான கடன் திட்ட அறிக்கை, முதலீடுகள் தொடர்பான இயந்திரங்களுக்கு கொட்டேசன் போன்ற தேவைப்படும் அனைத்து ஆவணங்களை முறையாக இணைக்கவேண்டும்.

 

விவசாய உற்பத்தியாளர் கம்பெனிக்கான வங்கிக்கடன் திட்ட அறிக்கை தயாரித்தலுக்கான முடிவுரை

கம்பெனியின் ஒவ்வொரு நடவடிக்கையும் திட்டமிட்டு வியாபாரத்தை எவ்வாறு சிறப்பாக எடுத்து செல்வது, திறமையான நிர்வாகிகள், நிர்வாகமும் முறையான வியாபார மீள் ஆய்வும் மேற்கொண்டால் சிறப்பான திட்ட அறிக்கையும், செயல்பாடும் விரும்பத்தக்க இலாபத்தை பெற்று கம்பெனியின் அடுத்தடுத்த செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.