வாழ்நாள் கல்வி

மண்புழு உரம் தயாரிக்கும் முறைகளும், அதன் பயன்களும்

மண்புழு உரம் தயாரிக்கும் முறைகளும், அதன் பயன்களும்

மண்புழு உரம் தயாரிக்கும் முறைகளும், அதன் பயன்களும்

Facebook twitter googleplus pinterest LinkedIn


மண்புழு உரம் தயாரிக்கும் முறைக்கான முன்னுரை

மண்புழு உழவனின் நண்பன்.  நிலத்தை பண்படுத்துவதிலும், வளமாக்குவதிலும் மண்புழுவின் பங்கு முக்கியமானது. பலவகையான மண்புழுக்களைக் கொண்டு கரிமப் பொருள்களைக் கழிவு செய்து இயற்கையான முறையில் தயாரிப்பது மண்புழு உரம் ஆகும். மண்புழுக்கள், பல கரிமப் பொருள்களை உண்டு விவசாயப் பயன்பாட்டிற்குத் தேவையான நைட்ரைட், பாஸ்பரஸ், பொட்டசியம், கால்சியம், மெக்னீசியம் மிகுந்த எச்சத்தை வெளியேற்றுகின்றன. மேலும் மண்புழுக்கள் மண்ணில் ஊடுருவும் போது விவசாயத்திற்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியா பூஞ்சைகளை வளர்க்கவும் பயன்படுகின்றன. இவ்வகையான விவசாயிகளின் நண்பன் என்றழைக்கப்படும் மண்புழுக்கள் செயற்கையான உரங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருப்பதனால் விவசாய நிலங்களில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகையால் இந்நிலையை மாற்றும் விதமாக மண்புழு உரத்தின் பயன்பாட்டையும் அதனைத் தயாரிக்கும் முறை பற்றியும் இங்குக் காண்போம்.

 

மண்புழு உரத்தின் பயன்பாடுகள்.

மண்ணில் / விவசாய நிலத்தில் மண்புழுக்கள் ஊடுருவும் போது 50-500 மைக்ரோ மீட்டர் இடைவெளி ஏற்படுத்திக் காற்றோட்டத்தை அதிகப்படுத்துகின்றன. நிலத்தில் நன்மை உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, அவற்றின் செயல்பாடுகளையும் அதிகப்படுத்துகின்றன..மண்ணில் நீர்ப் பிடிப்புத்திறனை அதிகரிக்கின்றன.  விதைகளின் முளைப்புத்தன்மை செடிகளின் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றன.  நிலத்தில் தங்கும் கழிவுகளை. மண்புழுக்களால் செயலாக்கப்படும். உயிர்க்கழிவு மாற்றத்தினால் குறைக்கலாம்.  மண்ணில் மீத்தேன் வாயு மற்றும் நைட்ரிக் வாயு உற்பத்தியைக் குறைக்கலாம்.

 

சிறிய அளவிலான மண்புழு உரம் தயாரிக்கும் முறை

75 செ.மீ. உயரம் X 120செ.மீ. அகலம் கொண்ட சதுர வடிவத் தொட்டி அமைக்க வேண்டும்.

மாட்டுச்சாணத்தைச் சேகரித்து ஏழு முதல் பத்து நாள்கள் வரை உலர வைக்க வேண்டும்.

பயிர் கழிவுகள்  சாணம், காய்கறி கழிவுகள் அழுகிய பழங்கள் பழங்களின் தோள்கள், முட்டை ஒடுகள், தேநீர்க் கழிவுகள், இலைதழைகள் போன்றவற்றை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் கலந்து பல அடுக்குகளாக 75 செ.மீ. உயரம் வரை தொட்டியில் நிரப்ப வேண்டும்.

நிரப்பிய தொட்டியினை 4-5 நாள்களுக்கு மேலே தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் குளிரச் செய்தல் வேண்டும்.

மண்புழுக்களைத் தொட்டியில் நிரப்பிய கழிவுகளின் மேலே பரப்புதல் வேண்டும்.

வாழை இலைகளைக் கொண்டு  மூன்று நாள்களுக்கு மூடி வைக்க வேண்டும். கோணிப்பைகளைக் கொண்டு மூடி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உரத்தின் வெப்பத்தை அதிகப்படுத்திவிடும்.

இரண்டு முதல் மூன்று நாள்களுக்குப் பிறகு 10 செ.மீ. ஆழத்திற்கு உரத்தை மெதுவாகக் கிளறி விட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது மண்புழுக்கள் உள்ளே செல்ல ஏதுவாக இருக்கும்.

மேலும் 7-10 நாள்களுக்கு மூடி வைக்க வேண்டும். இதே போல 10 நாள்களுக்கு ஒரு முறை உரத்தைக் கிளறி விட வேண்டும். 40 நாள்களுக்குள் நான்கு முறை செய்வதன் மூலம் அனைத்துக் கழிவுகளும் உரமாகிவிடும்.

உரத்தைத் தொட்டியிலிருந்து எடுக்கும் பொழுது 60 செ.மீ. உரம் மண்புழு கலந்த மிகச் சிறந்த மக்கிய உரமாக இருக்கும். இதனைப் பயன்படுத்தி அடுத்த முறை கரிமப் பொருள்களை நிரப்பி மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். புதிதாக மண்புழு விடவும் தேவையில்லை.

தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட உரத்தைச் சலிப்பதன் மூலம் அதில் உள்ள மண்புழுக்களைப் பிரித்தெடுத்து மீண்டும் பயன்படுத்தலாம்.

75 செ.மீ. X 120 செ.மீ அளவிலான தொட்டிக்குத் தேவையான கச்சாப் பொருள்கள்.

உலர்ந்த கரிமக் கழிவு                -  50 கிலோ

சாணக் கழிவு                                -  15 கிலோ

பாஸ்பேட்                                       -  2 கிலோ

மண்புழு                                          - 500-700 (எண்ணிக்கை) / 1 Kg

தண்ணீர்                                           - 5 லிட்டர் (மூன்று நாள்களுக்கு ஒரு முறை)

பயன்படுத்தப்படும் கச்சாபொருள்களின் விகிதம் - 5:1.5:0.2:  50-75.0.5

சாண எரிவாயுக் கலத்தில் மீதமாகும் சாணத்தில் மண்புழு உரம் தயாரித்தல்

சாண எரிவாயு கலத்திலிருந்து வெளிவரும், மீதமுள்ள சாணத்திலிருந்து (சிலரி) மண்புழு உரம் தயாரிக்கலாம்.  இதற்காக நான்கு அடி அகலம் ஒன்பது அடி நீளம் மூன்று அடி உயரத்தில் ஆறு தொட்டிகள் அமைக்கவேண்டும்.  இந்த தொட்டிகளில் சிலரி சாணத்துடன் மண்புழு மற்றும் கழிவுப் பொருட்களை கலந்து மண் புழு உரம் தயாரிக்கலாம்.  நான்கு மாடுகள் உள்ள ஒரு பண்ணையில் வருடத்திற்கு 5000 கிலோ மண்புழு உரம் கிடைக்கும். 

 

மண்புழு உரத்தின் ஊட்டச்சத்தின் அளவு

சத்துக்கள்

மண்புழு உரம்

மக்கிய உரம்

 

கரிம கார்பன்

9.8          – 13.4%

12.2%

 

தழைச்சத்து

0.51         – 1.61%

0.8%

 

மணிச்சத்து 

0.19         – 1.02%

0.35%

 

பொட்டசியம்

0.15         - 0.73%   

0.48%

 

சுண்ணாம்புச்சத்து

1.18         – 7.61%

2.21%

 

மக்னீசியம்

0.093        - 0.568%

0.57%

 

சோடியம்

0.058        – 0.158%

0.01%

 

துத்தநாகம்

0.0042       – 0.110%

0.0012%

 

தாமிரம்

0.0026       – 0.0048%

0.0017%

 

இரும்புச்சத்து

02056        -1.3313%

1.169%

 

மாங்கனீசு தாது

0.0105       – 0.2038%

0.0414%

 

 

மண்புழு உரம் உரமாகப் பயன்படுத்தும் முறை

மண்புழு உரத்தை நேரடியாக மண்ணில் / விவசாய நிலத்தில் கலந்து விடலாம். அல்லது நீர்ப் பாய்ச்சலின் போது தண்ணீருடனும் கலந்துவிடலாம்.

எல்லா வளர்ச்சி நிலையிலும் உள்ள விவசாயப் பயிர்கள், தோட்டக்கலை, அலங்காரச் செடிகள் மற்றும் காய்கறிச் செடிகளுக்கு மண்புழு உரத்தைப் பயன்படுத்தலாம்.

விவசாயப் பயிர்களுக்கு 2-3 டன் / ஹெக்டர் என்ற அளவில் விதையுடன் கலந்து பயன்படுத்தலாம்.

பழ மரங்களுக்கு தேவையான அளவை, மரத்தின் வயதைப் பொறுத்து ஐந்து முதல்; 10 கிலோ வரை பயன்படுத்தலாம்.

காய்கறிச் செடிகளுக்குத் தேவையான அளவு: நாற்றுகள் வளர்ப்பதற்கு ஒரு டன் / ஹெக்டர் அளவு பயன்படுத்தலாம். வளரும் செடிகளுக்கு 400 -500 கிராம் பயன்படுத்தலாம்.

பூச்செடிகளுக்கு 750-1000 டன் / ஹெக்டர் வரை பயன்படுத்தலாம்

 

மண்புழு உரம் தயாரிக்கும் முறைக்கான முடிவுரை

எனவே இவ்வகையான மண்புழு உரத்தை விவசாயிகளே தயாரித்து நிலத்தில் செயற்கையான இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இயற்கையான மண்புழு உரத்தைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் காணலாம். இது மாதிரியான மண்ணில் வளரும் பயிர்களில் இரசாயன நச்சுகள் குறைந்து காணப்படும். இதனை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏதும் இருக்காது.