வாழ்நாள் கல்வி

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


பஞ்சகவ்யம் முன்னுரை

இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதில் பஞ்சகவ்யத்தின் பங்கு முக்கியமானதாகும்.  இது விவசாயத்திற்கு ஓர் வரப்பிரசாதமாகும்.  பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை பற்றி இதில் காணலாம்.

 

 

தேவையான பொருள்கள்

வ.எண். 

பொருள்கள்:

எண்ணிக்கை

1.                                   

25 லிட்டர் அளவுள்ள டிரம்       

1 எண்

 

2.

பசுவின் சாணம்                        

5 கிலோ

 

3.

பசுவின் சிறுநீர் (கோமியம்)

5 லிட்டர்

4.

பசுவின் பால்

2 லிட்டர்

5.

பசுவின் தயிர்        

2 லிட்டர்

6.

பசுவின் நெய்         

அரை கிலோ

 

7.

இளநீர்   

10 எண்

 

8.

வெல்லம்

2 கிலோ

 

9.

வாழைப்பழம்(கூழாக)      

10 முதல் 12 எண்

 

10.

பப்பாளிப்பழம்(கூழாக)

2 கிலோ

 

11.

கரும்புச்சாறு        

2 லிட்டர்

 

 
 

தயாரிப்பு முறை

சாணம் நெய் இரண்டையும் நன்கு பிசைந்து கலக்கவும் தினமும் காலை மற்றும் மாலை ஒரு முறை நன்கு பிசைந்து விடவும்.

மேற்படி மூன்று நாளில் சாணத்தில் உள்ள நுண்ணுயிர்கள் நெய்யை தங்களுக்கு உணவாகப் பயன்படுத்தி செரித்து விடும். இந்த மூன்று நாட்களில் நெய் முழுமையாகச் சிதைந்து நீரில் கரையக்கூடிய தன்மையயை அடைந்துவிடும்.

மூன்றாம் நாள் மேற்படி பட்டியலில் கொடுத்துள்ள மற்ற பொருட்களை இத்துடன் சேர்க்கவும்.  பப்பாளிப்பழம், வாழைப்பழம்  இரண்டையும் நன்கு அரைத்துக் கூழாக்கிப் பின்னர் இதில் கலக்கவும்.  டிரம்மை மூடி மேலும் ஏழு நாட்கள் ஊற விடவும்.

தினமும் காலை மாலை ஆகிய இரண்டும் வேளையும் ஒரு குச்சியால் எதிரெதிர் திசைகளில் நன்கு கலக்கி விடவும்.  இவ்வாறு கலக்கி விடுவது நுண்ணுயிர்கள் சிறப்பாக செயல்படத் தூண்டுகோலாக அமைகிறது.  ஏழாவது நாளில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

 

 

தெளிப்பில் பயன்படுத்த

தெளிப்பில் பயன்படுத்த

பஞ்சகவ்யம் 100 மிலி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் அனைத்து வகை பயிர்களுக்கும் மாதம் ஒரு முறை அல்லது 2 முறை தேவைககு ஏற்ப

பயன்படுத்தலாம் மாலை நேரங்களில் தெளிப்பது நல்லது.

 

பயன்கள்

தெளிப்பில் பயன்படுத்த

பஞ்சகவ்யம் 100 மிலி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் அனைத்து வகை பயிர்களுக்கும் மாதம் ஒரு முறை அல்லது 2 முறை தேவைககு ஏற்ப பயன்படுத்தலாம் மாலை நேரங்களில் தெளிப்பது நல்லது.

 

பஞ்சகவ்யம் முடிவுரை

வீட்டில் பயன்படுத்தும், எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கலாம்.  இதனால் செலவும் குறையும்.  மருந்தில்லா இயற்கை காய்கறிகளை விளைவித்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடல் நலமும் மேம்படும்.