வாழ்நாள் கல்வி

உளுந்து

உளுந்து

உளுந்து

Facebook twitter googleplus pinterest LinkedIn


உளுந்து முன்னுரை

மக்களின் அன்றாட தேவைகளில் உளுந்து முக்கியமான பயிராகும்.  அதிக சத்துக்கள் கொண்டதாகவும், பெரும்பாலான அளவில் பயன்படுத்தப்படும் பயிராகவும் விளங்குகிறது. உளுந்து பயிரிடும் முறையை பற்றியும் பராமரிக்கும் முறை பற்றியும் இந்தப் பாடத்திட்டத்தில் காணலாம்.

 

 

இரகம்

வம்பன் 4 முதல் 8 வரை கோ 5

 

 

பட்டம்

ஆடி மாசி (பிப்ரவரி-ஜுலை)

 

 

தேவைப்படும் விதைகள்

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ.

 

விதை நேர்த்தி

உயிர் உர விதை நேர்த்தியாக ரைசோபியம் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி 200 கிராம் இவற்றை ஆறிய அரிசி வடி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

 

 

நிலம் தயாரிப்பு

நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தொழுவுரம் போட வேண்டும் இத்துடன் 30 கிலோ டி.ஏ.பி உழவு சால் மூலம் ஒரு ஏக்கருக்கு போட வேண்டும்.

 

 

பயிர் இடைவெளி

30 – 10 செ.மீ (33 செடிகள் ஒரு சதுர மீட்டருக்கு)

 

 

களை நிர்வாகம்

நடவு செய்த 15- ம் நாள் ஒரு முறையும் 30 -ம் நாள் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும். பயறு சாகுபடியில் சரியான தருணத்தில் களை எடுக்காமலிருந்தால் பயிர் வளர்ச்சி பாதிக்கக்பபட்டு மகசூல் குறையும்.

 விதை முளைக்கும் போதும் பூ பூக்கும் பருவம் மற்றும் காய் வளர்ச்சி பருவம் ஆகிய முக்கிய வளர்ச்சி பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும்.

 

இலைவழி தாவர உணவு

இலைவழித் தாவர உணவாக 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மி.லி தேமோர் கரைசலை பயிர் பூ பூக்கத் தொடங்கும் பருவத்திதலும், பூப் பருவத்திலும் இரண்டு முறை 15 நாட்கள் இடைவெளி விட்டு செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், மீன் அமிலம் ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மிலி கலந்து தெளிக்க வேண்டும்.

 

நோய் தாக்குதலின் அறிகுறியும், கட்டுப்படுத்தும் முறைகள்

அசுவினி தாக்குதலின் அறிகுறி:

அசுவினி தாக்குதலின் அறிகுறி இளம் தளிர்கள் பூக்கள் மொட்டுகள் பிஞ்சுகளில் அடை அடையாக கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.  பூக்களும் பிஞ்சுகளும் உதிரும் செடிகளைச் சுற்றி எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

பச்சைக் காய்ப்புழு தாக்குதல்:

பச்சசைக் காய்பபுழு தாக்குதலின் அறிகுறி இதன் பழுப்பு நிற தாய்ப்பூச்சி மஞ்சள் நிற முட்டைகளை இளம் தளிர்கள் பூக்கள் காய்களில் தனித்தனியாக இடுகின்றன. இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் தலைபாகத்ததை மட்டும் காய்களுக்குள் செலுத்தி வட்ட வடிவ துவாரங்கள் ஏற்படுத்துகின்றன.

கட்டுப்படுத்தும் முறை:

விளக்குப்பொறி இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 3 சிசி கட்ட வேண்டும்.

நாவாய்ப்பூச்சி தாக்குதல்:

நாவாய்ப்பூச்சி தாக்குதலின் அறிகுறி இப்பூச்சிகள் ஒரு வித துர்நாற்றத்தை உ;ணடாக்கும். காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் அவை வாடி உதிர்ந்து விடும்.

தண்டு ஈ தாக்குதல்:

தண்டு ஈ தாக்குதலின் அறிகுறி கருமை நிற தாய் ஈ தன் முட்டைகளை இளம் தளிர்களில் இடும். வாடும் செடிகளை கவனித்தால் தண்டு பகுதி நசிந்து துளைக்கப்பட்டு இருக்கும் தண்டின் உள்ளேயே கூட்டுப்புழு காணப்படும்.

மஞ்சள் இலைத் தேமல் நோய் தாக்குதல்:

அறிகுறி : இலைகளில் தேமல் போன்று மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் தீவிரமாக தாக்கப்பட்ட செடிகளில் இலைகள் சிறுத்து பூ மற்றும் காய்கள் பிடிக்ககாமல் இருக்கும். காய்கள் பிடித்த செடியில் விதைகள் ஊறாமல் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

நோய் தாக்கிய செடிகளை பிடிங்கி அழிக்கவும். நோய் எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும். 3 நாள் புளித்த தயிர் 100 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

சாம்பல் நோய் தாக்குதல்:

சாம்பல் நோய் தாக்குதலின் அறிகுறி இலைகளின் இரு புறங்களிலும் சிறிய வெண்மை கலந்த சாம்பல் நிறமான புள்ளிகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

நோய் தாக்கிய செடிகளை அகற்றி அழிக்க வேண்டும்.

வேர் அழுகல் நோய்:

வேர் அழுகல் தாக்குதலின் அறிகுசுறி வயலில் செடி வாடி ஆங்காங்கே காய்ந்து காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மணலோடு கலந்து போட்டு கட்டுப்படுத்தலாம்

விதை நேர்த்தி செய்வதின் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

பொதுவான நோய் கட்டுப்படுத்தும் முறை

மேற்கண்ட நோய் அறிகுறிகள் பயிரில் தென்பட்டால் முக்கூட்டு எ;ணணெய் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மிலி கலந்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

1. பறவைக்குச்சி நடுதல்

2. வரப்பு பயிர்கள் நடவு செய்தல்

3. ஆமணக்கு கரைசல் தண்ணீரோடு கலந்து வைத்தல்

4. மஞ்சள் வண்ண ஒட்டுண்ணி அட்டை வைத்தல்

5. மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கட்டாயமாக செய்ய வேண்டும்.

சேமித்து வைத்தல்:

100 கிலோ விதைக்கு 3 கிலோ அரைத்த வேப்பங்கொட்டைத்தூள் கலந்து வண்டின்

சேதத்தைக் குறைக்கலாம்.  காற்று புகாத பையில் சேமித்து வைக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

 உளுந்து பயிர் நடவு செய்தால் அடுத்த பயிருக்கு மகசூல் கூடும். அறுவடை செய்யும் பொழுது உளுந்து பயிரின் வேர் பகுதியை காட்டிலேயே விட்டு விட வேண்டும்.

அருகு அதிகம் இருந்தால் கோடை காலத்தி;ல் கடப்பாறை கம்பி கொண்டு அதிகம் உள்ள பகுதியில் வேரோடு நீக்கவேண்டும்.  பிசிலி போன்றவற்றை வேருடன் அகற்றி மிகக் கவனமான நிலத்தினை விட்டு சிறு சிறு துண்டுகளை நிலத்தில் இருந்து உடனுக்குடன் வேருடன் பிடுங்கி அகற்ற வேண்டும்.

 

உளுந்து முடிவுரை

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி உளுந்து பயிரிட்டு பராமரிப்பு செய்வதால் அதிக மகசூலும், இலாபமும் பெறலாம்.