வாழ்நாள் கல்வி

மக்காச்சோளம்

மக்காச்சோளம்

மக்காச்சோளம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


மக்காச்சோளம் முன்னுரை

உலகம் முழுவதும் பயிரிடப்படும் தானியம் மக்காச்சோளம் ஆகும்.  உலகளவில் அதிகமாக பயிரிடப்படும் தானியமும் இதுதான். கால்நடைகளுக்கும் இது முக்கியத் தீவனமாக உள்ளதால் மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே உள்ளது.  சத்துக்கள் நிறைந்த மக்காச்சோளத்தை சிறந்த முறையில் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை இதில் காணலாம்.

 

இரகம் & பட்டம்

வீரிய ஒட்டு இரகங்கள்.   ஆண்டு முழுவதும் பயிரிடலாம்

 

விதையின் அளவு

ஏக்கருக்கு 7 கிலோ முதல் 9 கிலோ வரை.

 

விதை நேர்த்தி

200 கிரோம் அசோஸ்பைரில்லம் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆறிய அரிசி வடி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

 

நிலம் தயாரித்தல்

மூன்று முதல் நான்கு உழவு போட வேண்டும் கட்டிகள் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

உர மேலாண்மை

அடி உரம் இடுதல்: 

பசுந்தாள் உரம் ஏக்கருக்கு 6 கிலோ அல்லது பல தானிய விதைக்ள ஏக்கருக்கு 8 கிலோ அளவில் விதைத்து 25 நாட்களுக்குப் பிறகு மடக்கி உழவு செய்ய வேண்டும்.

தொழு உரம்: 

கடைசி உழவின்போது 5 டன் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 1000 கிலோ போட வேண்டும்.

உயிர் உரம்: 

நடவு செய்த 15-ம் நாள் 1000 கிலோ மக்கிய ஆறிய தொழு எருவுடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம் 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இவை அனைத்தையும் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது இட வேண்டும்.

 

பயிர் இடைவெளி

வரிசைக்கு வரிசை 2 அடி செடிக்கு செடி 1 அடி

 

நீர் நிர்வாகம்

10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

50 –வது நாளிலிருந்து 100 நாட்கள் வரை வயலில் ஈரம் இருந்துகொண்டே இருந்தால் நல்லது.

 

களை நிர்வாகம்

30 -ம் நாள் களைக் கொத்துக் கொண்டு களையை வெட்டி எடுத்து பின் வேரினைச் சுற்றி நன்கு மண் அணைக்க வேண்டும்.          இது வேருக்கு மிகவும் பக்க பலமாக இருக்கும். ஆட்கள் மூலம் களையை வெட்டி கட்டுப்படுத்தலாம்.

 

நுண்ணூட்டம்

பற்றாக்குறை அறிகுறி

    பயிர் வெளிரி இளமஞ்சள் நிறமாக காணப்படும்.  இவ்வாறு இருந்தால் ஆண் பூவிலிருந்து மகரந்தம் குறைவாக வெளிப்படும். கதிர்கள் சொட்டையாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை: 

நடவு செய்த 5 -வது நாள் ஒரு ஏக்கருக்கு சிறு தானிய நுண்ணுரம் 5 கிலோ இட வேண்டும். அல்லது இலை வழியாக 30 -வது நாள் சிறுதானிய நுண்ணுரம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம்.

 

நோய் தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறைகளும்

பூச்சிக்கட்டுப்பாடு: அசுவினி தாக்குதல்:

                        இது பொதுவாக கோடைக்காலங்களில் தென்படும்.  55 முதல் 60 -வது நாளில் ஆண் பூவில் அசுவினி இருக்கும். ஆண் பூக்கள் தாக்கபபடுவதால் மகரந்தம் கீழே வெளிப்படாது. அதனால் சோளக் கதிர் சொட்டையாகி விடுவதால் மகசூல் பாதிக்கும்.

அடிச்சாம்பல் நோய் தாக்குதல்: 

இந்த நோயின் தாக்குதல் சமீப காலங்களில் அதிகமான தாக்குதலை உ;ண்டாக்கி உள்ளது. மக்காச்சோளம் இலையில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி பாதிக்கப்பட்ட பயிர் முழுவதும் இந்நோய் பரவி சிவப்பு கலருக்கு மாறிவிடும். இதனால் மகசூல் பாதிக்கும்.

பொதுவான நோய் கட்டுப்படுத்தும் முறை: 

மேற்கண்ட நோய் அறிகுறிகள் பயிரில் தென்பட்டால் முக்கூட்டு எண்ணெய் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மிலி கலந்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

 

ஒருங்;கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

1. பறவைக்குச்சி நடுதல்.

2. வரப்பு பயரிகள் நடவு செய்தல் (மஞ்சள் வண்ணப் பூக்களைக் கொண்ட பயிர்கள், ஆமணக்கு, அகத்தி, தட்டைப்பயிர்)

3. ஊடுபயிர் பயிரிடுதல் (கீரை வகைகள், கொத்தவரங்காய், மக்காச்சோளம், சூரியகாந்தி கொடிவகை, காய்கறிகள்)

4. ஆமணக்கு கரைசல் தண்ணீரோடு கலந்து வைத்தல்.

5. மஞ்சள் வண்ண ஒட்டுண்ணி அட்டை வைத்தல்.

6. பூச்சி விரட்டி மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை கலந்து தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கட்டாயமாக செய்ய வேண்டும்.

 

அறுவடைத் தொழில் நுட்பம்

முதிர்ந்த மக்காச்சோளக் கதிர்களை ஒடித்து நன்கு காய வைத்து இயந்திரத்தில் போட்டு மக்காச்சோளத்தை பிரித்தெடுக்க வேண்டும்.  எடுத்த மக்காச்சோளத்தை வெயிலில் உலர்த்த வேண்டும். உலர்த்தாவிட்டால் பூஞ்சாணம் தாக்க வாய்ப்புள்ளது.

குறிப்பு:  பயிரில் பசுமை குறைவாக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் 19 – 19 – 19 கரையும் உரத்தை தெளித்து வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

 

மக்காச்சோளம் முடிவுரை

கால்நடைகளுக்கான தீவனத் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் மக்காச்சோளத்தை மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மகசூலை அதிகப்படுத்தலாம்.  அதிக இலாபம் அடையலாம்.