வாழ்நாள் கல்வி

உற்பத்தியாளர் நிறுமத்தின் தேவையும், முக்கியத்துவமும்

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


உற்பத்தியாளர் நிறுமத்தின் தேவையும், முக்கியத்துவத்திற்கான முன்னுரை

ஊர் கூடித் தேர் இழுத்தால் இலக்கை சென்றடையும்.  அது மாதிரிதான் ஒரே தொழில் செய்யுறவங்க ஒன்று கூடி ஒற்றுமையுடன் செயல்படும்போது கடினமான காரியத்தையும், சுலபமாக செய்து முடிக்கலாம்.  விவசாயிகளால் விவசாயிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் விவசாய உற்பத்தியாளர் நிறுமம்.  உற்பத்தியாளர் நிறுமம் என்றால் என்ன? அதன் நோக்கம் பற்றிய தகவல்களை காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்தவெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல் நிறுவனம் மூலமாக வாய்ஸ்மெயில்களாக வழங்கப்படுகிறது.உற்பத்தியாளர் நிறுமம்

உற்பத்தியாளர்கள் என்பது விவசாயிகள் ஒன்றாக இணைந்து தாம் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்கும் வலிமையை உண்டாக்கி கொடுப்பது தான் உற்பத்தியாளர் நிறுமம் ஆகும்.  இது விவசாயிகளால் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுமம்தான் உற்பத்தியாளர் நிறுமம்.உற்பத்தியாளர் நிறுமத்தின் அமைப்பு

நமது நாட்டில் எல்லா வகை தொழில் செய்கின்றவர்களும் ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர். அதன் மூலம் அவர்களின் தேவைகள் குறிக்கேதள்களை அடைகின்றனர். ஆனால் வெந்ததை தின்று விட்டு வீதி வந்தால் மடிவதும், இஷ;டப்பட்டு கஷ;டப்படக் கூடிய ஒரே இனம் விவசாயிகள் தான். இந்த விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு ஒளிக்கீற்றை உருவாக்க மத்திய அரசின் தீவிர வழிகாட்டுதலின் பேரில் தொடங்கி நடைமுறையில் உள்ள ஒர் அமைப்புதான் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி.கம்பெனி சட்டம்

இது உற்பத்தியாளர் கம்பெனி சட்டம் 2013- கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் கம்பெனி சட்டத்தில் உள்ள 581-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விவசாயம் மற்றும் அதைச் சர்ந்த உற்பத்திகள் அனைத்தையும் செய்யக் கூடியது. இது குறிப்பாக விவசாயிகளை வியாபாரிகளாகவும் மற்றும் முதலாளிகளாகவும் மாற்றக் கூடியது. முதலாளியும் நாமே தொழிலாளியும் நாமே என்பது இதன் தாரக மந்திரமாகும். விவசாயிகள் மட்டும் தான் உற்பத்தியாளர் கம்பெனி தொடங்க முடியும். கம்பெனி சட்டம் 581(சி)ன் படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட தனி நபர்கள் ஒன்றிணைந்தோ அல்லது அதே விவசாயம் மற்று அதன் உப தொழில்களை செய்யும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்தோ உருவாக்கக் கூடியது உற்பத்தியானர் நிறுமம் ஆகும்.உற்பத்தியாளர் நிறுமத்தின் தேவையும், முக்கியத்துவத்திற்கான நோக்கங்கள்

இன்றைய சூழலுக்கு உகந்த வழியில் உற்பத்தியையும் வருமானத்தையும் பெருக்க விரும்பும் விவசாயிகளுக்கு தொழில் நுட்பம் மற்றும் சமூக ரீதியிலான வாய்ப்புகளைக் கொடுக்க கூடியது. உற்பத்தியாளர் நிறுமம்.  உள்ளூர் வள ஆதாரங்கள் மற்றும் இயற்கையின் வளங்களை அளவுடன் பயன்படுத்தி தேவைப்படும் போது பொருட்களை திறம்பட கையாளுவதற்கும் வழிகாட்டுவது, தவிர ஆண் மற்றும் பெண் விவசாயிகளை அவரவர்கள் வழும் சமுதாயத்தில் சுயபலம் மிக்கவர்களாகவும் மாற்றி அதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் சொந்த அறிவையும் கலாச்சாரத்தையும், வலுவுள்ளதாக மாற்றக் கூடிய தன்மை கொண்டது உற்பத்தியாளர் நிறுமம்.உற்பத்தியாளர் நிறுமத்தின் செயல்பாடுகள்

மாறிவரும் சூழலுக்கேற்ப விவசாயிகளின் அணுகுமுறைகள் மற்றும் திறமைகளையும் பலப்படுத்தும். அதுபோக பாரம்பரிய அறிவும் அறிவியல் பூர்வமான அறிவும் இணைந்து எதிர்காலத்தில் விவசாயிகளின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியது உழவர் உற்பத்தியாளர் கம்பெனி. இதன் தலையாய நோக்கம் நசிந்துவரும். விவசாயத்தை மேம்படுத்துவது ஆகும். விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதை தடுப்பது. இதன் அடுத்த நோக்கமாகும். விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு தானே விலையை நிர்ணயிக்கும் வலுவை கொடுக்கும். கூடியதாகும். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, இயற்கை வளங்களான நிலம், நீர், காற்று மற்றும் பிற வளங்களை சீர்கேடு அடையாமல் பாதுகாப்பது ஆகும். மொத்தத்தில் விவசாயியை வியாபாரியாக மாற்றிக் கூடியது உற்பத்தியாளர் கம்பெனியாகும்.உற்பத்தியாளர் நிறுமத்தின் தேவையும், முக்கியத்துவத்திற்கான முடிவுரை

உற்பத்தியாளர் நிறுமத்தின் அமைப்பு, நோக்கம், நிறுமத்தில் இணைந்தால் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள், தொழில்நுட்ப ஆலோசனை உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நியாயமான விலை, நாமே தொழிலாளி, நாமே முதலாளி என்ற தாரக மந்திரம் வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்யும்.