வாழ்நாள் கல்வி

ஆடு வளர்ப்பு

குறுஞ்செய்திகள்

விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு


வெள்ளாட்டு இனங்களுக்கான முன்னுரை

ஆடுவளர்ப்பு தொழிலில் நம்ம தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் தரக்கூடியது ஆடுவளர்ப்புத் தொழில்.  அதனால் தான் ஆட்டை நடமாடும் வங்கி  என்றும் ஏழைகளின் பசு என்றும்; சொல்வார்கள்.  உலகத்தில் மொத்தம் 120 வெள்ளாட்டு இனங்கள் இருக்கிறது. அதில் இந்தியாவில் மட்டும் 22 வெள்ளாட்டு இனங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் முக்கியமான இனங்களில் மூன்று உள்ளது.  அது கன்னி ஆடு, கொடி ஆடு, சேலம் கருப்பு. அது போக நம் பகுதியில் சூழ்நிலைக்கு ஒத்து வாழக்கூடிய தலைச்சேரி, ஜமுனாபாரி, பள்ளை ஆடு ஆகிய இந்த வகை ஆடுகளையும் தமிழ் நாட்டில் வளர்க்கலாம். காமன் வெல்த் ஆஃப் லேர்னிங் கனடாவின் திறந்த வெளி கல்வி வளங்கள் பிரிவுடன் இணைந்து தேனி மாவட்டம் இராசிங்காபுரம் விடியல்; நிறுவனத்தின் மூலம் தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் வெள்ளாட்டு இனங்கள் மற்றும் அதனுடைய சிறப்பை வாய்ஸ் மெயில்களாக உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.கன்னி ஆடுகளின் தோற்றம்

கன்னி ஆடுகள் விருதுநகர், தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இந்த வகை ஆடுகள் கருப்பு நிறத்துடனும், முகம் மற்றும் காது பகுதிகளில் வெள்ளை அல்லது பழுப்பு நிற கோடுகளுடனும், அடிவயிறு, தொடைபகுதி, வால்பகுதி, கால்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிறமுடனும் காணப்படும். ஆடுகளில் வெள்ளை கோடுகள் இருந்தால் அவை பால் கன்னி என்றும் பழுப்பு நிற கோடுகள் இருந்தால் செங்கன்னி என அழைக்கப்படுகிறது.கன்னி ஆடுகள் வளரும் தன்மை

கன்னி ஆடுகள் உயரமாகவும். திடகாத்திரமாகவும் ஒரே நிறத்துடன் இருப்பதால் கூட்டமாக நடக்கும் போது ஒரு இராணுவ அணிவகுப்பு போல் கண்கொள்ளாகாட்சியாகக் காணப்படும். கன்னி ஆடுகள் மற்ற தமிழக ஆடுகளை விட அதிகமான அளவில் இரன்டு அல்லது மூன்று குட்டிகளை ஈனும்.  மேலும் குட்டிகளை நன்றாக பேணிப் பாதுகாக்கும். பெட்டை ஆடுகள் 27 கிலோ வரையும் கிடாக்கள் 30 கிலோ வரையும் இருக்கும். உயரம் 78 செ.மீ வரையும், நீளம் 69 செ.மீ முதல் 71 செ.மீ வரை காணப்படும். இவை தமிழ்நாட்டின் சீதோஷ;ண நிலைக்கு ஒத்து வாழும் தன்மையுடையது.கொடி ஆடுகள்

இந்த வகை ஆடுகள், தூத்துக்குடி, எட்டையாபுரம், ஒட்டபிடாரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகிறது. இவை உயரமாகவும்,, நீளமாகவும் இருக்கும் வெள்ளை நிறத்தில் கருப்பு அல்லது சிவப்பு நிற புள்ளிகள் காணப்படும். அடி வயிற்று பகுதி வெள்ளை நிறமாகவும் முதுகுப்பகுதி கறுப்பு நிறமாகவும், முதுகுப்பகுதி கருப்பு நிறத்துடனும் காணப்படும்.  கருப்பு நிற புள்ளிகளுடன் இருந்தால் கரும்போரை எனவும் சிகப்பு நிற புள்ளிகள் காணப்பட்டால் செம்போரை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 85 செ.மீ வரையும் நீளம் 74 செ.மீ வரையும் இருக்கும்.  பெட்டை ஆடுகள் 32 கிலோ வரையும்  கிடா 38 கிலோ வரையும் எடை இருக்கும்.சேலம் கருப்பு

இந்த வகை ஆடுகள் சேலம், தருமபுரி, கிருஷ;ணகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த வகை ஆடுகள் கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் உயரம் 77 செ.மீ, நீளம் 69 செ.மீ, பருமன் 71 செ.மீ காணப்படும். பெட்டை ஆடு 25 கிலோ வரையும், கிடா 33 கிலோ வரையும் எடைக் காணப்படும். இந்த வகை ஆடுகள் வறட்சியை தாங்கி வளரும் ஆடுகள் ஆகும்.பள்ளை ஆடுகள்

இந்த வகை ஆடுகள் மிகவும் குட்டையாகாவும், மூலிகாதுகளுடன் இருக்கும். ஒரு ஈற்றில் மூன்று முதல் நான்கு குட்டிகள் ஈனும் தன்மை கொண்டது.  இதற்கு சீனி ஆடுகள் என்ற பெயரும் உண்டு.தலைச்சேரி

இந்த வகை ஆடுகள் மலபார் ஆடுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வகை ஆடுகள் இறைச்சி மற்றும் பாலுக்காக வளர்க்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை, பழுப்பு, கருப்பு என பல நிறங்களில் காணப்படும். பெட்டை ஆடுகள் 40 கிலோ வரையிலும் கிடாக்கள் 45 கிலோ எடையும்  உடையவை. இவ்வகை ஆடுகள் ஈற்றுக்கு மூன்று முதல் நான்கு குட்டிகள் வரை ஈனும் திறன் உள்ளவை.ஜமுனாபாரி

இந்த வகை ஆடுகள் உத்திரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டது. இது பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. இவ்வகை ஆடுகள் உயரமாகவும், பெரிய உடலமைப்பு கொண்டவையாகவும் காணப்படும். இந்த வகை ஆடுகள் பல்வேறு உடல் நிறத்துடன் இருக்கும். இதன் சிறப்பு அம்சம் நீண்ட பெரிய தொங்கும் காதுகளும் ரோமானிய மூக்கும் கொண்டதாகும். கிடாக்கள் 60 முதல் 70 கிலோ வரை எடையும் பெட்டை ஆடுகள் 45 முதல் 55 கிலோ வரை எடையும்  காணப்படும். உயரம் கிடாக்கள் மற்றும் பெட்டை முறையே 70 முதல் 80 செ.மீ வரையும் இருக்கும். நாள் ஒன்றுக்கு 2 முதல் 2.5 கிலோ வரை பால் கொடுக்கும். பாலில் கொழுப்பு சத்து 3 முதல் 3.5 சதவீதம் வரை இருக்கும்.வெள்ளாட்டு இனங்களுக்கான முடிவுரை

இன்றைய உலகில் பருவகால மாற்றம் என்பது உயிரினங்களின் வாழ்க்கையில் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில் நமது தட்பவெப்ப நிலைக்கு ஒத்தப் போகக்கூடிய நம்நாட்டு இன ஆடுகளான கன்னி ஆடு, கொடி ஆடு, சேலம் கருப்பு, பள்ளை ஆடு, கேரளாவின் தலைச்சேரி, உத்திரபிரதேசத்தின் ஜமுனாபாரி ஆகிய ஆடுகளை வளர்த்து பயன்பெறுவோம்.  நம் நாட்டு இன வெள்ளாடுகளின் சிறப்பை பத்தி வாய்ஸ் மெயில்களாக தொகுத்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு பயன் பொறும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்.