வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடு வளர்ப்பு முன்னுரை
வெள்ளாடு வளர்ப்பு என்பது ஏழைகளின் ஏடிஎம் என்றே அழைக்கப்படுகிறது.
1. வெள்ளாடு வளர்ப்புக்கு ஆரம்ப முதலீடு மட்டுமே
2. வறட்சி நிலவும் பகுதிகளில் வெள்ளாடு வளர்ப்பு என்பது பிரச்சனைகள் குறைவான ஒரு பண்ணைசார் தொழிலாக விளங்குகிறது.
3. வெள்ளாட்டுப்பால் உணவு மற்றும் ஜீரணச் சக்தியை அதிகப்படுத்துகிறது. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் அலர்ஜி எதுவும் தராது. இதில் பூஞ்சைக்கு எதிராகவும் பாக்டீரியாவுக்கு எதிராகவும் பல நன்மைகள் இருப்பதால் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. வெள்ளாட்டுப்பால் எளிதில் ஜீரணமாகக் கூடியது.
வெள்ளாட்டு வளர்ப்பிற்கான வழிமுறைகள்
கொட்டகை அமைத்தல்:
1. தரையிலிருந்து சற்றே உயரமான உலர்வான இடத்தில் கொட்டில் அமைக்க வேண்டும்
2. நீர் தேங்காத சொதப் சொதப்பான பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்
3. கொட்டிலானது 10 அடி உயரத்தில் மற்றும் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்
4. அதிக உற்பத்திக்காக ஆடுகளை 8-9 மாத இடைவெளியில் இனவிருத்தி செய்யலாம்.
5. வெயில் மற்றும் குளிர் காலங்களில் குட்டியிடுவதை தவிர்;க்க வேண்டும்
ஆடு இனங்கள்
ஜனமுனாபாரி, பீட்டல், பார்பாரி, தலைச்சேரி, சிரோகி, உஸ்மனாபாடி, கன்னி ஆடு, கொடி ஆடு, சங்தங்கி, செகு ஆகிய இனங்கள் உள்ளன.
தீவன மேலாண்மை
மேய்ச்சலுக்கு புதர்செடி சிறு செடிகளை பராமரிக்க வேண்டும்
தங்களுடைய பண்ணையிலிருந்து சுற்றியிருக்கும் பண்ணையிலிருந்து பயிரிடப்பட்ட தீவனப்பயிர்களை மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நார்த்தீவனம் மூலம் 2/3 பகுதி என்ற அளவில் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும் நார்த்தீவனத்தின் ஒரு பகுதி பயிறு வகையைச் சேர்ந்த பசும் தீவனமாகவும் ஒரு பகுதி புற்கள்/இளம் பசும் இலைகளாகவும் அளிக்கலாம்
நல்ல தரமான பசும் தீவனங்கள் கிடைக்காத பொழுது அடர் தீவனங்களை மாற்றாக அளி;க்கலாம்
5 மாத வயதுடைய குட்டிகளுக்கு கொலஸ்ட்ரம் தரலாம். பின் குட்டிகளுக்குஆரம்ப உணவு அளிக்கலாம்
பயிறு வகையைச் சேர்ந்த பசும் தீவனத்தை 15 நாட்கள் முதல் தரலாம்
எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம்
இனப்பெருக்க காலத்தின் போது பெண் மற்றும் ஆண் ஆடுகளுக்கு கூடுதல் அடர் தீவனம் தர வேண்டும்
புரிந்துரைக்கப்பட்டபடி ஊட்டச்சத்து தேவைகளை அளிப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தீவனத்திற்காக அமைக்கப்படும் தொட்டியானது சிமெண்ட் அல்லது மரத்திலானதாகவும், இரண்டு பாகங்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். தீவனம் மற்றும் உலர் தீவனம் வைப்பபதற்கு இது உதவும்.
நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தருதல்
1. குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல் அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்றவை எல்லாம் ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளாகும் அதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2. ஏதாவது உடல்நிலை சரியில்லாதவாறு தெரிந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
3. ஏதும் பெரிய அளவில் நோய் தென்பட்டால் மற்ற ஆடுகளிடமிருந்து தனித்து வைத்திருக்க வேண்டும்.
4. ஆடுகளுக்கு வயிற்றை சுத்தம் செய்யும் குடற்புழு நீக்க மருந்துகளை சீராக தந்து பராமரிக்க வேண்டும்
5. தடுப்பூசி மருந்து அட்டவணைப்படி பரிந்துரைக்ககப்பட்டவைகளை போட வேண்டும்
தடுப்பூசிகள் போடுதல்:
துள்ளுமாரி நோய் மற்றும் டெட்டனஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் இனப்பெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போட வேண்டும்
குட்டிகளுக்கு துள்ளுமாரி நோய் மற்றும் டெட்டனஸ் தடுப்பூசிகளை பிறந்த 8-வது வாரமும் பிறகு 12 வது வாரமும் கட்டாயமாக போட வேண்டும்.
வளர்ந்த ஆடுகளுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்டனஸ் தடுப்பூசிகளை போட வேண்டும்.
குட்டிகளை கவனித்தல்:
1. புதிதாகப் பிறந்த குட்டிகளை அதிகக் கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்
2. நஞ்சுக் கொடியை அகற்றிய இடத்தில் அயோடின் கொண்டு தடவ வேண்டும்.
வெள்ளாடு வளர்ப்பு சந்தைப்படுத்துதல்
சதைப்பிடிப்புள்ள குண்டான குட்டி ஆடுகள், வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்யலாம். ஆடு வெட்டுமிடம் தனிப்பட்ட இறைச்சி உண்ணும் நபர்கள் இருக்கும் இடங்கள், வேளாண் பண்ணைகளில் இவற்றை விற்கலாம். அதனால் ஆடு வெட்டுமிடம் வசதி அல்லது உயிருடன் உள்ள ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் உள்ள இடத்தில் விற்கலாம். அதனுடைய புழுக்கைகளையும் விற்பனை செய்யலாம். வேளாண் பண்ணைகளுக்கு ஆட்டின் புழுக்கையும் அதிகளவி;ல் தேவைப்படுகிறது.
வெள்ளாடு வளர்ப்பு முடிவுரை
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி ஆடுவளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டால் உற்பத்தியை பெருக்கி ஆடுவளர்ப்புத் தொழிலை இலாபகரமாக செய்யலாம்.