வாழ்நாள் கல்வி

உற்பத்தியாளர் கம்பெனி அமைக்கும் முறைகள்

உற்பத்தியாளர் கம்பெனி அமைக்கும் முறைகள்

உற்பத்தியாளர் கம்பெனி அமைக்கும் முறைகள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


உற்பத்தியாளர் கம்பெனி அமைக்கும் முறைகள் முன்னுரை

உலகில் மாற்றம் என்ற சொல் ஒன்று மட்டும் தான் மாற்றம் இல்லாதது ஆகும். இந்த வகையில் நிறுவனங்கள் பல தோன்றி வளர்ந்தாலும் உழவர்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றம் இல்லாமல் இருக்கிறது இந்த நிலைமையை மாற்றி உழவர்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றத்தை கொண்டு வர ஒரு நிறுவனம் தேவை. இதை உணர்ந்து இன்றைய மத்திய அரசு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை தொடங்கி வழி நடத்த பல வழிகளில் ஆதரவு கரம் நீட்டி வருகிறது கீழே வரும் வாய்ஸ் மெயில்கள் மூலம் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி தொடங்குவது எப்படி என பார்க்கலாம்.

 

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி என்றால் என்ன?

முதலில் உற்பத்தியாளர்களான உணவு உற்பத்தி காய்கறிகள், பழங்கள், கைத்தறி நெசவாளர்கள், கைவினை பொருள் உற்பத்தியாளர்கள், பால் பண்ணை, மீன் வளர்த்தல், வனம் சார்ந்த பொருள்கள் தயாரித்தல், பதப்படுத்துதல், தரம் பிரித்தல்,

 டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்தல் ஆகிய தொழில்களை செய்பவர்கள் சிறு அமைப்புகளாக ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக உருவாக்குதல் உழவர் உற்பத்தியாளர் கம்பெனியாகும் இதில் உற்பத்தியாளர்கள் மட்டும் தான் உறுப்பினராக இருக்க முடியும்.

 

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி ஏன் அமைக்க வேண்டும்?

இன்று பிற தொழில்களை செய்து உற்பத்தியில் ஈடுபடும் எந்த நிறுவனமும் தன் உற்பத்தி பொருளுக்கு விலையை அதுதான் நிர்ணயிக்கிறது ஆனால் நெற்றி வேர்வையை சிந்தி 6 மாதம் உழைத்து தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விவசாயினால் விலையை நிர்ணயிக்க முடியவில்லை இந்த நிலையை மாற்றி பல விவசாயிகள் ஒரு அமைப்பாக ஒன்றிணைவதன் மூலம் விவசாயிக்கு தேவையான இடு பொருள்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அதே சமயம் தான் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு தானே விலையை நிர்ணயம் செய்யும் வலிமையை பெறுகிறான். தன் உற்பத்தி பொருள்களுக்கு எங்கெங்கு விலை கிடைக்கிறதோ அங்கு விற்பனையை செய்யும் சந்தை நிலவரத்தை அறியவும் புதிய தொழில் நுட்பங்களை அறியவும் எளிதில் பெறவும் உற்பத்தியாளர் கம்பெனி அமைக்க வேண்டும்.

 

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி காரணிகள்

இந்தியாவில் இரண்டு விதமான நிறுவனங்கள் உண்டு ஒன்று பிரைவேட் லிமிடெட் கம்பெனி. மற்றொன்று பப்ளிக் லிமிடெட் கம்பெனி. பிரைவேட் கம்பெனி என்பது தனிப்பட்ட நபர்கள் சேர்ந்து நடத்தும் தனியார் நிறுவனம். இதில் 200 பேர் வரை இயக்குநர்களாக இருக்கலாம். பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்பது பொதுத்துறை நிறுவனம். இதில் பங்கு விற்பனை மூலம் பல்லாயிரம் பேரை உறுப்பினர்களாக்க முடியும். ஆனால் கம்பெனி சட்டத்தில் திருத்தம் செய்து உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் தொடங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் விவசாயமும் கார்ப்பரேட் நிலைக்கு உயர்ந்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் கம்பெனியை குறைந்தது 10 உறுப்பினர்கள் அல்லது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இரண்டிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் தனித்தோ அல்லது இவை இரண்டும் இணைந்தோ தொடங்கலாம். இதில் குறைந்தது ரூ.100000/-  ஒரு லட்சம் பங்குத்தொகை இருக்க வேண்டும். அதிகபட்சம் 100000-க்கு மேற்பட்ட பங்குதாரர்கள் இருக்கலாம். பங்குகள் சம அளவு பங்குகளாக இருக்க வேண்டும். இதில் குறைந்தது 3 முதல் 10 இயக்குநர்கள் வரை இருக்கலாம் அதிகபட்சம் 15 இயக்குநர்கள் வரை இருக்கலாம்.

 

உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் நன்மைகள்

உற்பத்தியாளர் கம்பெனி

 

உற்பத்தியாளர் கம்பெனி அமைக்கும் முறைகள் முடிவுரை

உற்பத்தியாளர் கம்பெனி என்றால் என்ன அதை அமைப்பது எப்படி அதன் பயன்கள் பற்;றி மேலே கண்ட  வாய்ஸ் மெயில்கள் மூலம் தெரிந்து கொண்டோம். இதன் மூலம் ஒரு உழவர் உற்பத்தியாளர் கம்பெனி அமைப்பது எப்படி எனவும் தெரிந்து கொண்டோம். இது உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்து விவசாயிகள் வாழ்வு மேம்பட நம்மால் ஆன  உதவிகளை செய்வோம்.

விவசாயிகளின் வளம் நாட்டின் பலம்!