வாழ்நாள் கல்வி

ஒருங்கிணைந்த பண்ணையம்

ஒருங்கிணைந்த பண்ணையம்

ஒருங்கிணைந்த பண்ணையம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


ஒருங்கிணைந்த பண்ணையம் முன்னுரை

     ஒருங்கிணைந்த என்பது சங்கிலி தொடர் போல் ஒன்றுடன் ஒன்று இணைந்தது ஆகும். ஒரு உயிரினத்தின் கழிவு மற்ற உயரினத்தின் உணவு என்னும் தராக மந்திரம் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் செயல்முறைகளாகும். விவசாயத்தின் உபதொழிலில் ஒன்றிணைந்த கால்நடை வளர்ப்பு இன்று ஒரு பிரதான தொழிலாக மாறியுள்ளது. இன்று தகவல் தொழில் நுட்பம் படித்து கைநிறைய சம்பாதிக்கும் பொறியாளர்கள் கூட கால்நடை வளர்க்கும் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். இது இந்த தொழிலின் மேன்மையை விளக்குகிறது.  இந்தப் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் சிறப்புகள் பற்றி காண்போம்.

 

பால்மாடு வளர்ப்பு கொட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பால்மாடு வளர்ப்பு ஒரு சிறு பகுதியாகும் இந்த பண்ணையத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனத்தை பால்மாட்டின் கழிவு மற்றும் சாணங்களை உரங்களாக பயன்படுத்தி வளர்க்கலாம். இதனால் நல்ல சத்துள்ள பசுந்தீவனங்கள் மற்றும் தானியங்கள் கிடைக்கிறது. தீவன செலவு குறைகிறது. பால்மாடுகள் மீதம் வைக்கும் தீவனங்களை உண்டு வாழும் பால்மாடுகளின் உடலில் உள்ள உண்ணிகள் தெள்ளுப்பூச்சிகளை உண்டு வாழும் இதனால் பால்மாடுகள் புற உண்ணிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

 

பயோ காஸ் சிலிண்டர்

மாட்டின் சாணத்தை மூலப்பொருளாக்கி பயோகாஸ் சிலிண்டர் அமைக்கலாம். சாணத்தை கரைத்து அந்த சிலிண்டரில் ஊற்றும்போது எரிவாயு உற்பத்தியாகிறது நான்கு மாடுகள் உள்ள பண்ணையில் சாணத்தை வைத்து ஒரு வீட்டிற்கு சமையல் வேலைக்கு தேவையான எரிவாயு மற்றும் மூன்று மின் விளக்குகள் எரிவதற்கு தேவையான எரிசக்தியும் கிடைக்கிறது. இந்த வகையில் எரிபொருளுக்கு செலவு செய்யப்படும் ரூபாய் மிச்சமாகிறது. பயோகாஸ் சிலிண்டரில் இருந்து வெளிவரும் சாணக்கழிவு பயிர்களுக்கு நல்ல உரமாகிறது.

 

மீன் பண்ணை

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடுத்த பகுதி மீன் வளர்ப்பு ஆகும். நீர் வசதி உள்ள இடங்களில் ஒரு சிறு குளம் அமைத்து அதன் நடுவில் ஒரு கோழிக்கூண்டு அமைத்து அதில் நாட்டுக்கோழி அல்லது புறாக்களை வளர்த்தால் கோழி அல்லது புறாக்களின் எச்சம் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக அமைகிறது. இதனால் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு செலவு குறைகிறது.

 

பரண்மேல் ஆடு வளர்ப்பு

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அடுத்த பிரிவு பரண்மேல் ஆடுவளர்ப்பு. இந்த பரணின் கீழ் நாட்டுக்கோழிகள் வளர்ப்பு ஒரு முறையாகும். பரணின் கீழ் பகுதியில் கோழிகள் வெளியே செல்லாத நைலான் வலைகளை கட்டி வளர்த்தால் ஆடுகள் கழிக்கும் தீவனம் அடர்தீவனம் ஆகியவை கோழிகளுக்கு உணவாக பயன்படுகிறது. இந்த நாட்டுக்கோழிகள் பண்ணையில் ஆடுகளை தாக்கும் புற உண்ணிகள் மற்றும் புழு பூச்சிகளை கொத்தி தின்று விடும் இதனால் நோய்களுக்கு ஆகும் வைத்திய செலவு குறைகிறது.

 

இயற்கை உரம் தயாரித்தல்

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வளர்க்ப்படும் பால்மாடுகள், ஆடுகள், கோழிகள் மற்றும் மீன்குளத்தில் உள்ள நீர் எல்லாம் உரமாகி பயிர்கள் செழித்து வளர உதவுகிறது. பால்மாடுகளின் சிறுநீர், ஆடுகளின் சிறுநீரை குழிவெட்டி சேமித்தோ அல்லது பிளாஸ்டிக் டிரம் கொண்டு சேமித்தோ இயற்கை பூச்சிவிரட்டிகள் பஞ்சகாவியம், அக்கினி அஸ்திரம் போன்ற மூலிகை பூச்சிகொல்லிகளை உருவாக்கி பண்ணை குளத்தில் பயன்படுத்தியதை போக மீதத்தை விற்று இலாபம் அடையலாம்.

 

சுற்றுச்சுழல் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மாடு, ஆடு, கோழி மற்றும் மீன் போன்ற உயிரினங்கள் வளர்க்கப்படுவதால் ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உணவு என்ற முறையில் எல்லாம் பயன்படுத்தப்பட்டு விரயம் ஆகாத சூழல் நிலவி வருகிறது.  மேலும் குப்பைக் கூளங்கள்,  மாடு, ஆடு இவற்றின் சிறு நீர், சாணம் போன்றவை விவசாயத்திற்கு உரமாக இடப்படுவதால் சுற்றுச்சுழல் சுத்தமாகிறது. மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு இது உதவுகிறது.

 

ஒருங்கிணைந்த பண்ணையம் முடிவுரை

இந்தப் பாடத்திட்டத்தில் கண்டுள்ளபடி விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து செயல்படும்போது மண்ணில் வளம் கூடுகிறது. வளமான மண்ணில் நல்ல விளைச்சல் கிடைகிறது. வளமான மண்ணில் நல்ல மகசூல் கிடைக்கிறது.  இதனால் விவசாயிகள் வருமானமும் கூடுகிறது.