வாழ்நாள் கல்வி

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகப்பு முறைகள்

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகப்பு முறைகள்

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகப்பு முறைகள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் முன்னுரை

கால்நடை இனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி குணாதியங்களை கொண்டது.  ஒவ்வொரு இனத்தின் குணாதியங்களை புரிந்துக்கொண்டு அவைகளை பாதுகாப்பாக வழிநடத்தினால் இட மாறுதல் செய்வது எளிதாகிறது.  இன்று கால்நடைகளின் இடமாறுதலுக்கு மோட்டர் வாகனங்கள், தொடர்வண்டி, கப்பல் மற்றும் விமானம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.  இடமாறுதல் செய்யப்படும் கால்நடைகளை சரியான முறையில் இடமாற்றம் செய்யாவிடில் அதன் பண்புகளில் மாற்றம் ஏற்படும்.  குறிப்பாக இறைச்சிக்காக இடமாறுதல் செய்யப்படும் கால்நடைகளில் பண்புகளில் மாற்றம் அதிகமாக இருக்கும்.  கால்நடைகளை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு செல்லும் நடைமுறைகளைப் பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் காணலாம்.

 

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போக்குவரத்து முறைகள்

கோழிகள்:

கோழிகள் சுமார் 3 முதல் 300 கி.மீ வரை இக்காலத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. 1.6 முதல் 3 கிலோ எடையுள்ள 30-32 கோழிகளை எடுத்துச் செல்ல ஒரு மீட்டர் நீள அகலம் மற்றும் 23 செ.மீ உயரம் கொண்ட பெட்டிகள் தேவைப்படுகின்றன. தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் 8 மணி நேரத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும்.

பசுக்கள்:

பசுக்களை ஒரு நாளைக்கு 30 கி.மீ வரை மட்டுமே நடைப் பயணமாக அழைத்துச் செல்ல வேண்டும். பயணம் இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும். பட்சத்தில் முதல் நாள் 22 கி.மீ வரை மட்டும் அழைத்துச் செல்வது நல்லது. மோட்டார் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது பசு மற்றும் கன்று ஒன்றிற்கு முறையே 1.4-2 மீ2 மற்றும் 0.32 மீ2 இடமானது தேவை;படுகிறது.

ஆடுகள்:

ஆடுகளை நாளொன்றிற்கு 24 கி.மீ. வரை மட்டுமே நடைப் பயணமாக அழைத்துச் செல்ல வேண்டும். மோட்டார் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது ஆடு ஒன்றிற்கு 0.4 மீ2 இடம் தேவைப்படுகிறது.

 

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் வாகனங்களின் அமைப்பு

கால்நடைகளை வண்டிகளில் ஏற்றும் முன் வாகனங்கள் நல்ல காற்றோட்ட வசதியுடன் தரைப்பகுதியானது வழுக்காமலும். கழிவுகளை எளிதில் அகற்றும் வசதி கொண்டவையாகவும். நேரடியாகச சூரிய ஒளி மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

•    வாகனங்கள் முற்றிலும் மூடப்பட்டவையாக இருத்தல் கூடாது.

•    வண்டிகளின் தரைப்பகுதி மரத்தூள், வைக்கோல் போடப்பட்டுக் கால்நடைகள் நிற்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட வேண்டும்.

•    வாகனங்களின் பக்கங்கள் சரியான உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

•    வானங்களில் மேல் கூரை அமைப்பு சரியான உயரத்தில் இருத்தல் வேண்டும.

•    வாகனங்களின் முதலுதவிப்பெட்டிகள் கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.

•    வானங்களில் தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் இருத்தல் வேண்டும்.

•    கால்நடைகள் ஏற, இறங்குவதற்கு ஏதுவாகச் சரிவுத்தளம் அமைக்கப்பட வேண்டும்.

 

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

கால்நடைகளை வண்டிகளில் ஏற்றுவதற்கு 24 மணி நேரம் முன் அவற்றினை ஒரே    கொட்டகையில் அமைக்க வேண்டும.

•   கால்நடைகளை வண்டிகளில் ஏற்றும் முன் அவற்றிற்குத் தேவையான அளவுத் தீவனம் மற்றும்  தண்ணீர் அளிக்கப்பட வேண்டும்.

•   கொம்பு மற்றும் கொம்பில்லாத கால்நடைகளை ஒன்றாக எடுத்துச் செல்லுதல் கூடாது.

•   வௌ;வேறு இனக் கால்நடைகளை ஒன்றாக எடுத்துச் செல்லுதல் கூடாது.

•   கால்நடைகளைக் கால்களைக் கட்டி எடுத்துச் செல்லுதல் கூடாது.

•   காளைகளைக் கடினமான தடுப்புகளை அமைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

•   குட்டி ஈனும் நிலையிலுள்ள, நோயுற்ற மற்றும் மெலிந்த கால்நடைகளை ஏற்றிச் செல்லுதல்  கூடாது.

•   இளம்; குட்டிகளை வயதானவற்றோடு ஏற்றிச் செல்லுதல் கூடாது.

•   அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை ஒரே பெட்டியில் அடைத்துச் செல்லுதல் கூடாது.

•   உடல் நலமற்ற கால்நடைகளை மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் ஏற்றிச் செல்லுதல் வேண்டும்.

•   கால்நடைகள் நல்ல நிலையி;ல் உள்ளதா, பயணம் செய்யத் தகுந்தவையா, எவ்வித நோய்த் தொற்றுதல் அற்றவையா எனத் தகுந்த கால்நடை மருத்துவரிடம் பரிசோதித்த பின்னரே வெளிநாடுகளுக்கு ஏற்றிச் செல்ல வேண்டும்.

 

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் முடிவுரை

மேற்கூறிய வழிமுறைகளைச் சரியான முறையில் கடைப்பிடிப்பதின் மூலம் அனைத்து வகையான கால்நடைகளை எவ்விதச் சிரமமும் இன்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சென்று பயனடையலாம்.