வாழ்நாள் கல்வி

இயற்கை களைக்கொல்லி

இயற்கை களைக்கொல்லி

இயற்கை களைக்கொல்லி

Facebook twitter googleplus pinterest LinkedIn


இயற்கை களைக்கொல்லி முன்னுரை

'நெல்லுக்கு பாய்ச்சுற தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும்' என்ற சொல்லுக்கு ஏற்ப, நாம் பயிர் செய்யும்போது தேவையில்லாத செடிகள் வளர்ந்து நமது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதில் கோரை, அருகு போன்ற களைகள் அதிக அளவில் வளர்கின்றன. இவைகளை இயற்கை களைக்கொல்லி தயாரித்து அழிக்கும் முறைகளை பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் காண்போம்.

 

 

தேவையானப் பொருட்கள்

ஒரு மாதம் சேகரித்த மாட்டு கோமியம்

கடுக்காய் கொட்டை – 3 கிலோ

எலுமிச்சம்பழம் - 10 எண்

கல் உப்பு - 1 கிலோ

 

செய்முறை

ஒரு மாதம் வரை சேகரித்த மாட்டு கோமியத்தில் 10 லிட்டர் அளவில் எடுத்துக்கொண்டு அதி;ல் இடித்து பொடியாக்கிய 3 கிலோ அளவிலான கடுக்காக்காய் பொடியினை பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.  பின்னர் இத்துடன் 10 எலுமிச்சம்பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து மீண்டும் அதனுடன் நன்கு கலக்க வேண்டும். இவற்றை காலை மற்றும் மாலை வேளைகளில் நன்கு கலக்கிவிட வேண்டும்.  15 நாட்களுக்குப் பிறகு இயற்கை முறையிலான களைக்கொல்லி தயாராகி விடும்.

 

 

பயன்படுத்தும் முறை

10 லிட்டர் கோமியத்துடன் மேற்கண்ட கலவையில் 2 லிட்டர் மற்றும் கல் உப்பு 1 கிலோ என்ற அளவில் கலந்து கோரை அருகு போன்ற களைகளி;ன் மீது தெளிக்க வேண்டும்.

குறிப்பு:

கடுக்காய் கொட்டைகளை இடிக்கும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொண்டு இடிக்க வேண்டும். கடுக்காய் தூள் மூக்கின் வழியே உள்ளே சென்றால் காய்ச்சல் மற்றும் இருமல் வருகின்ற வாய்ப்பு அதிகம்.

தெளிப்பானை கொண்டு பயிரின் மீது படாமல் தெளிக்க வேண்டும்.

காலை நேரங்களில் 7 மணி முதல் 10 மணிக்குள் தெளிப்பது நல்லது.

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் தெளித்தால் பயன் குறையும்.

களைக்கொல்லி தெளித்த 5 தினங்களும் பயிருக்கு நீர் பாய்ச்சக் கூடாது.

 

இயற்கை களைக்கொல்லி முடிவுரை

மகசூலை பாழ்படுத்தும் களைகளை இயற்கையான முறையில் மிகக் குறைந்த செலவில் மேற்கண்ட முறையில் இயற்கை களைக் கொல்லியை தயாரித்து பயன்படுத்தினால் அதிக இலாபம் பெறலாம்.