வாழ்நாள் கல்வி

வெண்டை

வெண்டை – செலவு குறைந்த சாகுபடி முறை

வெண்டை

Facebook twitter googleplus pinterest LinkedIn


வெண்டை – செலவு குறைந்த சாகுபடி முறை முன்னுரை

மக்களின் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிப்பது வெண்டைக்காயாகும்.  வெண்டையை பராமரித்து அறுவடை செய்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் முறையாக பயிரிட்டு பராமரிப்பு செய்து வந்தால் அதிக இலாபம் ஈட்டலாம் என்பதை இந்தப் பாடத்திட்டத்தில் காணலாம்.

 

இரகம்

ஒட்டு இரகம்.  அர்க்கா அனாமிக்கா.

 

பட்டம்

மே, ஜூன் மாதங்களில் பயிரிடுவதை தவிர்க்கவும் மற்ற மாதங்களில் பயிரிடலாம்.

 

தேவைப்படும் விதைகள்

ஒட்டு இரகமாக இருந்தால் 2 கிலோவும், சாதாரண இரகம் என்றால் 3 கிலோவும் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.

 

விதை நேர்த்தி

அசோஸ்பைரில்லம் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா 200 கிராம் இரண்டையும் ஆறிய அரிசி வடி கஞ்சியில் கலந்து விதைகளை நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் நடவு செய்ய வேண்டும்.  வெயில் காலமாக இருந்தால் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நடவு செய்தல் வேண்டும்.

 

நிலம் தயாரிப்பு

மூன்று முதல் நான்கு உழவு போட வேண்டும்.  கட்டிகள் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

உர நிர்வாகம்

முதல் களையின் போது ஊட்டமேற்றிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் ஏக்கருக்கு 600 கிலோ என்ற அளவில் போட்டு மண் அணைக்க வேண்டும்.

அடி உரம் இடுதல் :

பசுந்தாள் உரம் ஏக்கருக்கு 6 கிலோ (சணப்பு தக்கைப் கொழுஞ்சி அல்லது பல தானிய விதைகள்) ஏக்கருக்கு 8 கிலோ அளவில் விதைத்து 25 நாட்களுக்கு பிறகு மடக்கி உழவு செய்ய வேண்டும்.

தொழு உரம்:

கடைசி உழவின் போது 5 டன் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 1000 கிலோ போட வேண்டும்.

 

பயிர் இடைவெளி

ஒட்டு இரகம்: வரிசைக்கு வரிசை 2 அடி. செடிக்கு செடி 1 அடி

சாதாரண இரகம் : வரிசைக்கு வரிசை ஒன்றரை அடி. செடிக்கு செடி 1 அடி

 

நீர் நிர்வாகம்

3 ம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்சிய பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் காய் அறுவடை செய்யும் பொழுது 4 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

களை நிர்வாகம்

ஆட்கள் மூலம் களை எடுத்து கட்டுப்படுத்தலாம்.  விதை நடவு செய்த 20 முதல் 25 நாட்களுக்குள் முதல் களை எடுக்கவேண்டும்.  இரண்டாவது களை 60 நாட்களுக்குள்ளும் எடுத்தப் பிறகு மண் அணைக்க வேண்டும்.

 

வளர்ச்சி ஊக்கிகள்

பூக்கும் பருவத்திலும் பிறகு 15 நாள் கழித்தும் வளர்ச்சி ஊக்கியான தேமோர் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மி.லி என்ற அளவில் வயலில் ஈரம் இருக்கும் பொழுது மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம்.

பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், மீன் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை தகுந்த இடைவெளி விட்டுத் தெளிக்கலாம்.

பூக்கும் பருவத்திலும் பிறகு 15 நாள் கழித்தும் வளர்ச்சி ஊக்கியான தேமோர் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மி.லி என்ற அளவில் வயலில் ஈரம் இருக்கும் பொழுது மாலை வேளையில் தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம்.

பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், மீன் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை தகுந்த இடைவெளி விட்டுத் தெளிக்கலாம்.

 

பூச்சி நிர்வாகம்

அசுவினி, பச்சைப்பூச்சி

அசுவினி தாக்குதலின் அறிகுறி:   காலை மற்றும் மாலை வேளைகளில் பயிருக்கு மேல் பகுதியில் பச்சை வண்ணப் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும்.

பச்சைப்பூச்சி தாக்குதலின் அறிகுறி :

காலை மற்றும் மாலை வேளைகளில் பயிருக்கு மேல் பகுதியில் பச்சை வண்ணப் பூச்சிகள் பறந்துக் கொண்டிருக்கும்.

 

நோய் தாக்குதலின் அறிகுறியும், கட்டுப்படுத்தும் முறைகள்

வேர் அழுகல் தாக்குதலின் அறிகுறி :

செடியை பிடுங்கிப் பார்த்தால் வேர்ப்பகுதி அழுகி காணப்படும்.  இந்நோய் தாக்கப்பட்ட செடி ஒரு வாரத்திற்குள் காய்ந்து மகசூல் இழப்பு ஏற்படும்.  தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கக்கூடாது.

கட்டுப்படுத்தும் முறை :   

டிரைக்கோடெர்மா விரிடி விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலமும் விதை நடவு செய்த ஒரு வாரத்திற்குள் டிரைக்கோடெர்மா  விரிடி 2 கிலோவுடன் மக்கிய தொழு எரு 50 கிலோ கலந்து வயலில் ஈரம் இருக்கும்பொழுது விதைத்து இந்நோயை கட்டுப்படுத்தலாம்.

காய்ப்புழு தாக்குதலின் அறிகுறி:   

மொட்டில் துவாரம் இட்டு இளம் பிஞ்சு காய்களை சாப்பிடுவதால் காய் வளைந்து காணப்படும்.

கட்டுபடுத்தும் முறை:  

இந்த காய்ப்புழுவை கட்டுப்படுத்த விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்;பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.  டிரைக்கோடெர்மா ஒட்டுண்ணி அட்டை 4 மில்லி ஃ ஏக்கர் பயன்படுத்தலாம்.

இனக்கவர்ச்சி பொறி 6 இடங்களில் வைத்து ஆண் அந்துப்பூச்சிசகளை கவர்ந்து அழிக்கலாம்.

மஞ்சள் தேமல் நோய் தாக்குதலின் அறிகுறி: 

செடி வெளுத்து இளமஞ்சள் நிறமாக ஆங்காங்கே காணப்படும்.  இந்நோய் வெள்ளை ஈ மூலமாக பரவுகிறது.  இந்நோயினால் பாதிதக்கப்பட்ட செடியின் காய்கள் அனைத்தும் வெண்மையாக மாறி விடும்.

சிவப்பு செல் தாக்குதலின் அறிகுறி:    இலை சல்லடை போன்று காணப்படும். இலையின் மேல் பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும்.

அடிச்சாம்பல் நோய் தாக்குதலின் அறிகுறி:    செடியின் பின்பகுதியில் இலையில் சாம்பல் நிறத்துடன் காணப்படும். பொதுவாக பனி காலமான நவம்பர் டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும்.

பொதுவான நோய் கட்டுப்படுத்தும் முறை:    மேற்கண்ட நோய் அறிகுறிகள் பயிரில் தென்பட்டால் முக்கூட்டு எண்ணெய் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 250 மி.லி கலந்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

1. பறவைக் குச்சி நடுதல்

2. வரப்பு பயிர்கள் நடவு செய்தல் (மஞ்சள் வண்ணப் பூக்களை கொண்ட பயிர்கள், ஆமணக்கு, அகத்தி,  தட்டைப்பயிர்)

3. ஊடுபயிர் பயிரிடுதல் (கீரை வகைகள் கொத்தவரங்காய் மக்காச்சோளம் சூரியகாந்தி)

4. ஆமணக்கு கரைசல் தண்ணீரோடு கலந்து வைத்தல்.

5. மஞ்சள் வண்ண ஒட்டுண்ணி அட்டை வைத்தல்

6. பூச்சி விரட்டி மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை கலந்து தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கட்டாயமாக செய்ய வேண்டும்.

அறுவடைத் தொழில் நுட்பம்:  

ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்ய வேண்டும் காய்களை செடியில் முத்தவிடக் கூடாது.  முத்த விட்டால் செடி வளர்ச்சி நின்று விடும்.

 

வெண்டை – செலவு குறைந்த சாகுபடி முறை முடிவுரை

சத்துக்கள் அதிகம் நிறைந்த வெண்டைக்காயை மேற்கண்ட வழிகளை பின்பற்றி முறையாக பராமரித்து வந்தால் அதிக இலாபமும் ஈட்டலாம்.